அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?

அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?,Oppo F27 5G Teased to Launch in India Soon
அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?
அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?

அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?

Oppo இந்தியாவில் அதன் OPPO F27 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில், இந்த புதிய ஒப்போ போனின் புகைப்படம் மற்றும் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. அதைப் பற்றி இங்கு மேலும் பார்க்கலாம்.

OPPO F27 5G Specifications

ஒப்போ எப்27 5ஜி அம்சங்கள்: இந்த புதிய Oppo ஃபோனில் LED ஃபிளாஷ் ஆதரவுடன் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. கேமரா வட்ட வடிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் Oppo F27 5G போன் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?
அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?

மேலும் Oppo F27 5G போன் IP69 மதிப்பீட்டில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த Oppo போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். குறிப்பாக நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த (Micro SD Card) மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த போன் ரூ.27,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய Oppo போன் 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP கேமரா, பெரிய டிஸ்ப்ளே உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவரவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, Oppo F27 5G போனின் சில அம்சங்கள் மட்டுமே ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இந்த போனின் அனைத்து வசதிகளும் விரைவில் வெளியிடப்படும். இப்போது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A3X போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

Oppo A3X Specifications

ஒப்போ ஏ3எக்ஸ் அம்சங்கள்: Oppo A3X 6.67 இன்ச் HD பிளஸ் LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இந்த போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1000 நிட்ஸ் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?
அடுத்த வாரம் இருக்கும்.. 256GB வேரியண்ட்.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5G போன்.. எந்த மாடல்?
இந்த Oppo ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த MediaTek Dimensity 6300 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது.

Oppo A3X ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த (Micro SD Card) மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது.

Oppo A3X ஸ்மார்ட்போன் இராணுவ தரநிலை MIL-STD 810H சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரையும் ஃபோன் ஆதரிக்கிறது. ஸ்டார்ரி பர்பிள், ஸ்பார்க்கிள் பிளாக், ஸ்டார்லைட் ஒயிட் ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

Oppo A3X ஸ்மார்ட்போன் 5100mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது, குறிப்பாக Oppo A3X போனின் 64ஜிபி மாறுபாடு ரூ.12,499 மற்றும் 128ஜிபி மாறுபாடு ரூ.13,499 விலையில் உள்ளது. புகைப்பட உபயம்: 91mobiles

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக