ரூ.20,000 விலை உயர்வு! Samsung Galaxy S26 வாடிக்கையாளர்கள் ஷாக்!

சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் (Samsung Galaxy S26 series) மாடல்களின் விலை இந்தியாவில் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது; புதிய விலைப் பட்டியல் விவரங்கள
Samsung Galaxy S26 series price hike in India and new price list in Tamil

சாம்சங் பிரியர்களுக்கு ஒரு பெரிய ஷாக் நியூஸ்! இந்திய சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சங் (Samsung ) நிறுவனம், தனது லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் (Samsung Galaxy S26 series) மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த சீரிஸில் விற்பனையாகும் மொத்தம் 7 வேரியண்ட்டுகளுக்கும் இந்தியாவில் ஒரே அடியாக ரூ.20,000 வரை விலை கூட்டப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் போன் வாங்க காத்துக்கொண்டிருந்த பலருக்கும் இந்த திடீர் விலை உயர்வு பாக்கெட்டில் பெரிய ஓட்டையைப் போட்டுள்ளது. இந்த வரிசையில் இருக்கும் கேலக்ஸி எஸ்26, எஸ்26 பிளஸ் மற்றும் டாப் மாடலான எஸ்26 அல்ட்ரா ஆகியவற்றின் பழைய விலை என்ன, இப்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய ரேட் என்ன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

Samsung Galaxy S26 New Price in India

சாம்சங் கேலக்ஸி எஸ்26 புதிய விலை: இந்த சீரிஸின் பேஸ் மாடலான கேலக்ஸி எஸ்26 போனில் வரும் இரண்டு மாடல்களுமே ரூ.20,000 வரை விலை ஏறியுள்ளன. இதில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஆரம்ப மாடல் முன்னதாக ரூ.87,999-க்கு விற்கப்பட்ட நிலையில், இனி இதனை வாங்க ரூ.1,07,999 கொடுக்க வேண்டும்.

அதேபோல இதன் 12GB ரேம் மற்றும் 512GB மாடல் ஆரம்பத்தில் ரூ.1,07,999 என்ற விலையில் வந்த நிலையில், இப்போது ரூ.1,27,999 என புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த தொடக்க மாடலே 1 லட்சத்தைத் தாண்டி விற்பனையாவது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Samsung Galaxy S26 Plus New Price in India

சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் புதிய விலை: பெரிய ஸ்கிரீன் மற்றும் கூடுதல் பேட்டரியுடன் கிடைக்கும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடலின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதில் வரும் 12GB ரேம் மற்றும் 256GB வேரியண்ட் முன்னதாக ரூ.1,19,999 விலைக்குக் கிடைத்து வந்த நிலையில், இனி ரூ.1,39,999 கொடுத்துதான் வாங்க முடியும்.

அடுத்ததாக இதன் 12GB ரேம் மற்றும் 512GB மாடல் ரூ.1,39,999 என்ற பழைய விலையில் இருந்து, தற்போது ரூ.1,59,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy S26 Ultra New Price in India

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா புதிய விலை: வேற லெவல் கேமரா மற்றும் எஸ்-பென் வசதியுடன் பட்டையைக் கிளப்பும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மாடலில் உள்ள மூன்று முக்கிய வேரியண்ட்டுகளுமே இந்த ரூ.20,000 விலை உயர்வைச் சந்தித்துள்ளன. இதன் ஆரம்ப 12GB ரேம் மற்றும் 256GB மாடலின் விலை ரூ.1,39,999-ல் இருந்து ரூ.1,59,999 ஆக உயர்ந்துள்ளது.

இதன் 12GB ரேம் மற்றும் 512GB மாடல் இனி ரூ.1,79,999 விலையில் கிடைக்கும்; இதன் பழைய விலை ரூ.1,59,999 ஆகும்.

கடைசியாக இந்த சீரிஸின் உச்சக்கட்ட டாப் வேரியண்ட்டான மான்ஸ்டர் 16GB ரேம் மற்றும் 1TB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா, முன்னதாக ரூ.1,89,999 விலையில் கிடைத்தது. இப்போது ரூ.20,000 ஏற்றப்பட்டு, ரூ.2,09,999 என மலைக்க வைக்கும் 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள ஏஐ சார்ந்த ரேம் மற்றும் சிப் தட்டுப்பாடு காரணமாகவே இந்த அதிரடி விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக