Redmi K60 Ultra: Sony கேமரா, 24GB ரேம், OLED டிஸ்பிளே.. 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Redmi K60 Ultra ...

Redmi K60 Ultra
Redmi நிறுவனம் தனது புதிய Redmi K60 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த புதிய Redmi ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெட்மி K60 Ultra ஸ்மார்ட்போன் Dimensity பிராசஸர், 50MP சோனி கேமரா, OLED டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது Redmi K60 Ultra ஸ்மார்ட்போன் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Redmi K60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பின்னர் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், எச்டிஆர்10+, டால்பி விஷன் உள்ளிட்ட பல டிஸ்பிளே வசதிகள் உள்ளன. குறிப்பாக இது ஒரு சிறந்த திரை அனுபவத்திற்காக OLED டிஸ்ப்ளே கொண்டிருப்பதால்.
பிரமிக்க வைக்கும் Redmi K60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 3.5GHz ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9200+ 4nm ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதேபோல், இந்த Redmi K60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் MIUI 14 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது.
Redmi K60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12GB/16GB/24GB ரேம் மற்றும் 256GB/512GB/1TB சேமிப்பகத்தை ஆதரிக்கிறது. மேலும், இந்த புதிய Redmi ஸ்மார்ட்போன் USB Type-C ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், Dolby Atmos உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வருகிறது.
ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்800 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20MP Sony IMX596 கேமராவும் இந்த போனில் உள்ளது.
Redmi K60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக வேகமாக சார்ஜ் செய்வதற்கு ஏற்ற சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
தொலைபேசியில் 5G, இரட்டை 4G VoltE, Wi-Fi 6, 802.11ax, ப்ளூடூத் 5.3, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. மேலும் இந்த போனின் எடை 204 கிராம். ஃபோன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரையும் ஆதரிக்கிறது. மேலும், இந்த போன் வெள்ளை, கருப்பு மற்றும் பச்சை கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Redmi K60 Ultra விலை
Redmi K60 Ultra 12GB RAM + 256GB சேமிப்பகத்தின் விலை 2599 யுவான் (இந்தியாவில் ரூ. 29,755) மற்றும் 16GB RAM + 256GB சேமிப்பகத்துடன் கூடிய Redmi K60 Ultra விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 32,045 RAM . Mr K60 அல்ட்ரா மாடலின் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 34,355) Redmi K60 Ultra மாடல் 16GB RAM + 1TB சேமிப்பகத்தின் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 38,015) Redmi K60 Ultra மாடல் + 21GB சேமிப்பகத்தின் விலை 3599 யுவான் (ரூ. 42,210)
தற்போதைய Redmi K60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் 24ஜிபி ரேம் கொண்ட ரெட்மி கே60 அல்ட்ரா மாடல் மட்டும் ஆகஸ்ட் 22ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS