ஆப்பிள் பிரியர்கள் மட்டுமின்றி அனைத்து ஸ்மார்ட்போன் பிரியர்களும் ஐபோன் 13 மாடலை பிளிப்கார்ட்டில் ரூ.40,000 பட்ஜெட்டில் வாங்கலாம். இந்த மொபைல...
ஆப்பிள் பிரியர்கள் மட்டுமின்றி அனைத்து ஸ்மார்ட்போன் பிரியர்களும் ஐபோன் 13 மாடலை பிளிப்கார்ட்டில் ரூ.40,000 பட்ஜெட்டில் வாங்கலாம். இந்த மொபைலின் முழு அம்சங்கள், விலை மற்றும் சலுகை விவரங்களை இங்கே காணலாம்.
iPhone 13 விவரக்குறிப்புகள்
இந்த ஆப்பிள் மாடல் iOS 15 உடன் வருகிறது. அதனுடன், Hexa Core A15 Bionic 5nm சிப்செட் மற்றும் Apple A15 Bionic 4 Core GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த iPhone 13 போன் 6.1 இன்ச் (2532 × 1170 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது OLED டிஸ்ப்ளே மாடல். இது ட்ரூ டோன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR ஆதரவுடன் வருகிறது.
செராமிக் ஷீல்டு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இந்த iPhone 13 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என 3 வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. தொலைபேசி இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது எல்இடி ஃபிளாஷ் லைட்டையும் கொண்டுள்ளது.
அந்த வகையில் இது 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவுடன் வருகிறது. இது சென்சார் ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் ட்ரூ டோன் ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது.
12 எம்பி TrueDepth செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா ரெடினா ஃப்ளாஷ், HDR வீடியோ பதிவு மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இரண்டும் 4K 60 fps வீடியோ பதிவை வழங்குகின்றன.
இந்த போன் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் உடன் வருகிறது. இ-சிம் ஆதரிக்கப்படுகிறது. ஃபோனில் உள்ளமைக்கப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இது MagSafe வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
பேட்டரி 19 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தை கொடுக்க முடியும். இந்த மாடல் நீலம், இளஞ்சிவப்பு, மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி மாறுபாடு ரூ.60,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வருகையுடன், விலை 53,999 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலையில், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ஃப்ளிப்கார்ட் உடனடி தள்ளுபடியாக ரூ.2,700 வழங்குகிறது. எனவே, இந்த போனை ரூ.51,299க்கு வாங்கலாம். இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தாலும், ரூ.40,000 பட்ஜெட்டில் போனை வாங்க முடியுமா என்ன? ஆம் ஒரு வழி இருக்கிறது.
Flipkart இல் இந்த போனை தள்ளுபடி செய்ய ரூ.37,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஒருவேளை உங்களிடம் ஐபோன் 12 அல்லது சாம்சங் போன் நல்ல நிலையில் இருந்தால், அதை தாராளமாக பரிமாறிக்கொள்ளலாம். இதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை போனஸ் கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ.10,000 போனஸுடன், ரூ.40,000 பட்ஜெட்டில் iPhone 13 மாடலை வாங்கலாம்.
COMMENTS