இடுகைகள்

iQOO 11 5G ஸ்மார்ட்போன் விலை குறைப்பு.

iQOO நிறுவனத்தின் ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 11 5ஜி போன் ரூ.59,999 விலையிலும், இதன் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.64,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

iQOO 11 5G ஸ்மார்ட்போன் விலை குறைப்பு.

ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு மூலம் iQOO 11 5G போனின் 8ஜிபி ரேம் கொண்ட மாடலை ரூ.49,999 விலையிலும், 16ஜிபி ரேம் கொண்ட மாடலை ரூ.51,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் உடனடியாக ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். இப்போது இந்த ஐக்யூ 11 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

iQOO 11 5G ஸ்மார்ட்போன் விலை குறைப்பு.

புதிய ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2பிராசஸர் மற்றும் விவோ வி2 இமேஜிங் சிப் உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த புதிய iQoo 11 5G ஸ்மார்ட்போன்.அதேபோல் ஃபன்டச் ஒஎஸ் 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் ஆதரவு உள்ளது. அதாவது ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

iQoo 11 5G ஸ்மார்ட்போன் 50எம்பி ISOCELL GN5 பிரைமரி சென்சார் + 13எம்பி டெலிபோட்டோ சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகிய ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் இரவில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுமன் இந்த ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். 5ஜி சேவைகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. பின்பு 120W FlashCharge சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 8 நிமிடங்களில் 50 சதவீதம் வரை இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துவிட முடியும் என நிறுவனம் கூறுயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iQOO 11 5G ஸ்மார்ட்போன் விலை குறைப்பு.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6,ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இந்த ஐக்யூ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

கருத்துரையிடுக