சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு Android 14 Update வெளியிடத் தொடங்கியுள்ளது. தற்போது இந்த புதிய அப்டேட் சில போன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது....
சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு Android 14 Update வெளியிடத் தொடங்கியுள்ளது. தற்போது இந்த புதிய அப்டேட் சில போன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த அப்டேட் அனைத்து Samsung Galaxy ஸ்மார்ட்போன்களிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy A34 ஸ்மார்ட்போன் இப்போது One UI 6-அடிப்படையிலான Android 14 Update பெறுகிறது. குரோஷியா, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, போலந்து, போர்ச்சுகல், செர்பியா, ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் உள்ள Galaxy A34 ஃபோனுக்கு இந்தப் புதுப்பிப்பு கிடைக்கிறது.
வந்துருச்சு Samsung Android 14 Update லிஸ்ட்ல நம்ப போன் இருக்கா.?
ஆனால் இந்தியாவில் Samsung Galaxy A34 பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் எப்போது கிடைக்கும் என்று சாம்சங் கூறவில்லை. இருப்பினும், இந்திய பயனர்கள் இந்த புதிய அப்டேட்டை விரைவில் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Quick Panel, App Interface, Photo Remaster, Object Eraser போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த அப்டேட் வருகிறது.குறிப்பாக Android 14 Update Samsung பயனர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை தரும் என்று கூறலாம். இப்போது Samsung Galaxy A34 அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பின்னர் இந்த கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1000 நிட்ஸ் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
Samsung Galaxy A34 ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 1080 6nm செயலி மற்றும் Mali-G68 MC4 GPU ஆதரவுடன் இயங்குகிறது, எனவே இந்த போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. பின்னர் தொலைபேசி 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி சேமிப்பகத்தை ஆதரிக்கிறது. ஃபோன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் ஆதரிக்கிறது, எனவே நீங்கள் பின்னர் மெமரி கார்டைப் பயன்படுத்தலாம்.
Samsung Galaxy A34 ஃபோனில் 48MP முதன்மை கேமரா + 8MP அல்ட்ரா வைட் கேமரா + 5MP மேக்ரோ ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 13எம்பி கேமராவும் உள்ளது. பின்னர் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
இந்த Samsung Galaxy A34 ஃபோன் 5000 mAh பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் வேகமாக சார்ஜிங் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது. அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.
குறிப்பாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் 5G, Dual 4G VoltE, Wi-Fi 6, Bluetooth 5.2, USB Type-C port உள்ளிட்ட பல இணைப்புகளை ஆதரிக்கிறது. இந்த அற்புதமான Samsung Galaxy A34 ஃபோன் மூலம் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரிக்கப்படுகிறது.
COMMENTS