கம்மி பட்ஜெட்ல Motorola G Power 5G 2024 அறிமுகம்.

கம்மி பட்ஜெட்ல Motorola G Power 5G 2024 அறிமுகம்.,சம்பவம் இருக்கு.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. புதிய மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?

கம்மி பட்ஜெட்ல Motorola G Power 5G 2024 அறிமுகம்.

Motorola அடுத்ததாக Moto G Power 5G (2024) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

அதன்படி, இந்த Moto G Power 5G (2024) ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. பின்னர், இந்த புதிய Moto போன் ஆர்க்கிட் டின்ட் மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக இந்த Moto G Power 5G போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

Moto G Power 5G 2024 - Specifications,

Moto G Power 5G (2024) ஸ்மார்ட்போன் அம்சங்கள்: மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 1200 x 1600 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 600 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


Moto G Power 5G (2024) ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

கம்மி பட்ஜெட்ல Motorola G Power 5G 2024 அறிமுகம்.

இது தவிர, இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், Moto G Power 5G (2024) ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பில் மோட்டோரோலா சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், இந்த Moto G Power 5G (2024) ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்டுடன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் உள்ள அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்னர், இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moto G Power 5G (2024) 

இருப்பினும், Android புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் கிடைக்கின்றன. மேலும், இந்த மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் கிடைக்கும். இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.


மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. 3.5மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுடன் இந்த போன் வரும். குறிப்பாக, Moto G Power 5G (2024) போன் ரூ.12,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


photo courtesy: MSPowerUser

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக