வேற லெவலில் ரெடியாகும் Redmi K70 Ultra மாடல் குறைந்தவிலை, 5500mAh பேட்டரி.. 24GB ரேம்.. சோனி கேமரா.. என பல அம்சங்கள்,மார்க்கெட்டே மிரள போகுது.. 5500m
அதன்படி, Redmi நிறுவனம் விரைவில் Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. அது பற்றிய விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
Redmi K70 Ultra specifications
Redmi K70 Ultra ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். அப்போது இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 144Hz புதுப்பிப்பு வீத ஆதரவுடன் 1.5K OLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். பின்னர் இந்த போனின் டிஸ்ப்ளே HDR 10 Plus, Dolby Vision, 2600 nits பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிளே சிறந்த காட்சி அனுபவத்தை தருகிறது.
Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9300+ SoC உடன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் Mali-G720 MP12 GPU (Mali-G720 MP12 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 24ஜிபி வரை ரேம் மற்றும் 1TB வரை சேமிப்பகத்துடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50MP Sony LYTIA 800 சென்சார் + 108MP அல்ட்ராவைடு லென்ஸ் + டெப்த் சென்சார் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் நீங்கள் அற்புதமான புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமரா உள்ளது. இது தவிர, எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
குறிப்பாக, Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5G, Wi-Fi, GPS, NFC, USB Type-C போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த போன் ரூ.35,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் இந்த ரெட்மி போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS