Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல் இலவசமாக அப்டேட் அவகாசம் மேலும் நீட்டிப்பு - முழு விபரம் இதோ..!

Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல் இலவசமாக அப்டேட் அவகாசம் மேலும் நீட்டிப்பு - முழு விபரம் இதோ..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குடிமக்கள் தங்களின் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல் இலவசமாக அப்டேட் அவகாசம் மேலும் நீட்டிப்பு - முழு விபரம் இதோ..!

1) இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தின்படி, ஆதார் அட்டை விவரங்களை செப்டம்பர் 14, 2024 வரை புதுப்பிக்கலாம், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல் இலவசமாக அப்டேட் அவகாசம் மேலும் நீட்டிப்பு - முழு விபரம் இதோ..!

2) கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை அப்டேட் செய்ய தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தை அணுகலாம் அல்லது மை ஆதார் இணையதளத்தில் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது ஆதார் தகவல்களை புதுப்பிக்கத் தொடங்கினர்.

Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல் இலவசமாக அப்டேட் அவகாசம் மேலும் நீட்டிப்பு - முழு விபரம் இதோ..!

3) ஆன்லைன் புதுப்பித்தலுக்கு கட்டணம் இல்லை. ஆதார் சேவை மையத்திற்கு நேரில் சென்று திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல் இலவசமாக அப்டேட் அவகாசம் மேலும் நீட்டிப்பு - முழு விபரம் இதோ..!

4) ஆரம்பத்தில், ஆதார் தகவல்களை இலவசமாகப் புதுப்பிக்க 23 டிசம்பர் 2023 வரை காலக்கெடு வழங்கப்பட்டது. பின்னர் இந்த காலம் மார்ச் 13, ஜூன் 14, 2024 வரை தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால், இனி செப்டம்பர் 14ம் தேதி வரை, எவ்வித கட்டணமும் இன்றி ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல் இலவசமாக அப்டேட் அவகாசம் மேலும் நீட்டிப்பு - முழு விபரம் இதோ..!

5) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும் வசதிகள் மூலம் ஆதார் விவரங்களை எளிதாக மாற்றலாம். https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்து உங்கள் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்.

Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல் இலவசமாக அப்டேட் அவகாசம் மேலும் நீட்டிப்பு - முழு விபரம் இதோ..!

6) நீங்கள் ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்ற விரும்பினால், இந்தப் படிகளைப் பின்பற்றவும்: UIDAI இணையதளத்தில் இருந்து ஆதார் பதிவுப் படிவத்தைப் பதிவிறக்கவும். தேவையான விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும். உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் / ஆதார் சேவை மையத்திற்குச் சென்று பயோமெட்ரிக் தகவலுடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிக்கவும். இங்கே உங்கள் நேரடி புகைப்படம் எடுக்கப்பட்டு, புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உடன் ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

கருத்துரையிடுக