Redmi Note 15 Pro: ரெட்மி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த Redmi Note 15 5G ஸ்மார்ட்போன் நேற்று (ஜனவரி 6) இந்தியாவில் அறிமுகமானது. 108MP கேமரா, வளைந்த திரை என இது சிறப்பாக இருந்தாலும், பலரும் கேட்பது "Pro மாடல் எப்போ வரும்?" என்பதுதான்.
இணையத்தில் கசிந்துள்ள (Leaks) உறுதியான தகவல்களின்படி, அடுத்த மாதம் (பிப்ரவரி 2026) Redmi Note 15 Pro அறிமுகமாகவுள்ளது. சாதாரண போன் போல இல்லாமல், இது ஒரு 7000mAh பேட்டரி உடன் வரும் உலகின் முதல் ஸ்லிம் போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு என்ன ஸ்பெஷல்? இதோ முழு விபரம்.
👉இதையும் படியுங்கள்: மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.32,000 ரேஞ்ச்.. 120W பாஸ்ட் சார்ஜிங்.. 5800mAh பேட்டரி.. 120W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
7000mAh பேட்டரி: சார்ஜரை மறந்திடுங்க!
வழக்கமாக 5000mAh பேட்டரி பார்த்திருப்போம். ஆனால், Redmi Note 15 Pro மாடலில் பிரம்மாண்டமான 7000mAh Si/C பேட்டரி இடம்பெறவுள்ளது.
- பயன்: கேம் விளையாடினாலும், வீடியோ பார்த்தாலும் 2 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும்.
- சார்ஜிங்: இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 90W அல்லது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா: 200MP மேஜிக்!
தற்போது வந்திருக்கும் சாதாரண மாடலிலேயே 108MP கேமரா உள்ளது. அப்போ Pro மாடலில்?
- Main Camera: இதில் 200MP (Samsung HP3 Sensor) பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
- Zoom: தூரத்தில் உள்ளதை துல்லியமாக எடுக்க 4x இன்-சென்சார் ஜூம் வசதி இருக்கும்.
- OIS: வீடியோ எடுக்கும்போது கை நடுங்கினாலும், வீடியோ ஷேக் ஆகாமல் (Stable) இருக்கும்.
டிஸ்ப்ளே & டிசைன் (IP69K)
- திரை: 6.7 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரும்.
- பாதுகாப்பு: இதுதான் ஹைலைட்! இந்த போன் IP69K தரச் சான்றிதழ் பெற்றுள்ளதால், சுடுநீரில் விழுந்தால் கூட போனுக்கு எதுவும் ஆகாது என கூறப்படுகிறது.
ப்ராசஸர்: ஜெட் வேகம்! 🚀
Pro மாடல் என்பதால் வேகம் முக்கியம். இதில் சக்திவாய்ந்த MediaTek Dimensity 7400-Ultra சிப்செட் இருக்க வாய்ப்புள்ளது. இது PUBG, Call of Duty போன்ற கேம்களை 'வெண்ணெய்' போல ஸ்மூத்-ஆக நடத்தும்.
👉இதையும் படியுங்கள்: OPPO Privilege Pack: வெறும் ரூ.99 க்கு கிடைக்கும்
விலை & அறிமுகம் எப்போது? (Launch Date)
- Launch: அனேகமாக பிப்ரவரி 2026 முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும்.
- விலை: இதன் விலை சுமார் ₹28,000 முதல் ₹32,000 பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
