Fridge Cooling Problems: பிரிட்ஜ் கூலிங் பிரச்சனை: காரணமான 10 தவறுகள்!: சுட்டெரிக்கும் வெயிலுக்குத் தாகம் தணிக்க நம்முடைய எல்லா வீடுகளிலும் ஒரு பிரிட்ஜ் ஆவது கட்டாயம் இருக்கத் தான் செய்யும். பிரிட்ஜ் வாங்கிய புதிதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும். ஆனால், வருடங்கள் நகர நகர உங்களுடைய பிரிட்ஜ்ஜின் குளிரூட்டும் திறன் (Fridge cooling problems) மெல்ல மெல்லக் குறைவது போல நீங்கள் உணர்வீர்கள். சிலர் இது நம்முடைய பிரம்மை என்று கருதிக்கொண்டு மனதைத் தேற்றிக்கொண்டாலும், இதுபோன்ற சிறிய வேறுபாடுகளை நன்கு உணர்ந்த கெட்டிக்காரர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கானது.
பிரிட்ஜ் கூலிங் பிரச்சனை: காரணமான 10 தவறுகள்!
உங்கள் வீட்டில் இருக்கும் பிரிட்ஜ்ஜின் கூலிங் குறைந்துவிட்டதாகக் கருதினால், "பிரிட்ஜ் கூலிங் பிரச்சனை" கட்டாயம் உங்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கீழே உள்ள 10 தவறுகளில் ஏதோ ஒன்றை நீங்கள் செய்து வருகிறீர்கள் என்று அர்த்தமாகும். உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங்கை மீண்டும் அதிரடியாக அதிகரிக்க, பிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 டிப்ஸ் (10 fridge maintenance tips) இதோ.
பிரிட்ஜ் கதவு மற்றும் வெப்பநிலை செட்டிங்ஸ்
1) பிரிட்ஜ் இன் கதவில் இருக்கும் ரப்பர் காஸ்கெட்டை (Fridge door gasket) கொஞ்சம் கவனியுங்கள். டோர் காஸ்கெட்டில் சிறிய வெடிப்புகள் அல்லது ஓட்டைகள் இருந்தால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் நிலையாக இருக்காது. இதனால் மின்சார சக்தியும் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.
2) பிரிட்ஜ் டோர்களைச் சரியாக மூடவும். சில நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் கதவைச் சரியாக மூடாமல் (Improper door closing) விட்டுவிடுவீர்கள். இப்படிச் செய்தால், உங்கள் பிரிட்ஜ் திறந்திருக்கும் நேரத்தில் குளிர்ச்சியை உருவாக்க அதிகமாகச் செயல்படும். இதனால் சில கோளாறுகளை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும்.
3) உங்கள் பிரிட்ஜ்ஜில் சரியான வெப்பநிலையை (Perfect temperature setting) செட் செய்வது முக்கியம். பிரிட்ஜ் இன் டெம்ப்பிரேச்சர் 4°C ஆகவும், பிரீசர் டெம்ப்பிரேச்சர் 0°C அல்லது -18°C-க்குள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
🔥 இன்றைய ட்ரெண்டிங்: 👉 வெச்சி செஞ்சிட்டாங்க கூகுள்! அமேசானில் ₹7,119 அதிரடி தள்ளுபடியில் Google Pixel 9a!
பொருட்களை அடுக்குதல் மற்றும் டிபிரோஸ்டிங்
4) பிரிட்ஜ்ஜில் அதிகமான பொருட்களை அடைசல் போலத் திணிக்கக் கூடாது (Overcrowding the fridge). அதாவது பிரிட்ஜ்ஜின் இன்டீரியர் வென்ட்கள் எளிதாகக் கூலிங் காற்றை அனுப்பும் படி, இடைவெளி விட்டுப் பொருட்களை அடுக்க வேண்டும்.
5) பிரிட்ஜ்ஜில் வைக்கும் உணவுகளைச் சரியாக பேக்கிங்குடன் பாதுகாப்பாக வைக்க (Safe food storage) வேண்டும். பிளாஸ்டிக் கண்டைனர் அல்லது மூடப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறப்பானது.
6) டிபிரோஸ்டிங் செய்யும் பழக்கத்தை (Defrosting fridge regularly) கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பிரிட்ஜ்ஜின் பிரீசரில் படியும் ஐஸ்களை உடனுக்குடன் நீக்கம் செய்வது முக்கியமானது. அதிகப்படியான ஐஸ் பிரீசரில் இருந்தால் பிரிட்ஜ் சீக்கிரம் கூலிங் ஆகும் என்பது போலியான தகவலாகும். பிரீசரில் படியும் ஐஸ் பிரிட்ஜ்ஜை வீணடிக்கும், மின்சார செலவை அதிகரிக்கும்.
😲 இதையும் மிஸ் பண்ணிடாதீங்க: 👉 Flipkart-ல் மெகா ஆபர்! பாதிக்கு பாதி விலையில் பிரம்மாண்டமான Acer 55-inch 4K TV!
பிரிட்ஜ் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்தல்
7) உங்கள் பிரிட்ஜ் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி குறைந்தது 2 இன்ச் இடைவெளி (Proper ventilation gap) ஆவது இருக்க வேண்டும். குறிப்பாக, சுவருக்கு அருகில் பிரிட்ஜ்ஜை வைக்கும் போது, இதை நோட் செய்வது மிகவும் முக்கியமானது.
8) உங்கள் பிரிட்ஜ்ஜை அடிக்கடி சுத்தம் செய்வது மிக முக்கியமானது. பிரிட்ஜ்ஜை சுத்தமாக வைக்காவிட்டால், நாளடைவில் அழுக்குகள் பிரிட்ஜ்ஜின் வெண்ட்களை ஆங்காங்கே அடைத்துவிடும் (Cleaning fridge vents). இதனால் கூலிங் சிக்கல் எழக்கூடும்.
9) பிரிட்ஜ்ஜின் கன்டென்சர் காயில்களை (Cleaning condenser coils) சுத்தமாக வைப்பதும் முக்கியமானது. கன்டென்சர் காயிலில் தூசிகள் மற்றும் அழுக்குகள் படியத் துவங்கினால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் வருடங்கள் நகர நகரக் குறைய அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்: Realme P3 Pro 5G Flipkart Offer: 28% அதிரடி ஆபர்!
தரைத்தளம் மற்றும் வருடாந்திர செக்கப்
10) பிரிட்ஜ் நேரான தரையில் (Level ground surface), எந்தவித ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் நிலையாய் அமைந்திருக்கிறதா என்பதைச் சோதனை செய்துகொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறையாவது பிரிட்ஜ் மெக்கானிக்கை வைத்து பிரிட்ஜ்ஜை முழுமையாக செக் அப் (Annual fridge maintenance) செய்வது சிறப்பானது.
முன்கூட்டியே உங்களோட பிரிட்ஜில் ஏதும் பிராப்ளம் வராமல் இருப்பதற்கு சில பொருட்கள் இங்கே நான் லிஸ்ட் செய்துள்ளேன் இது வாங்கி பயன்படுத்துங்கள்.
| பொருளின் பெயர் (Amazon Products) | எதற்குப் பயன்படுகிறது? | வாங்கும் லிங்க் (Buy Link) |
|---|---|---|
| Airtight Containers Set | உணவுகளைப் பாதுகாப்பாக மூடி வைக்க | இங்கே கிளிக் செய்து வாங்கவும் |
| Fridge Cleaning Brush | வென்ட்கள் மற்றும் காயில்களைச் சுத்தம் செய்ய | இங்கே கிளிக் செய்து வாங்கவும் |
| V-Guard Fridge Stabilizer | மின்சாரம் ஏறி இறங்குவதைத் தடுத்து கம்ப்ரஸரைக் காக்க | இங்கே கிளிக் செய்து வாங்கவும் |
| Fridge Cover and Mat Set | பிரிட்ஜ்ஜின் மேல்புறம் தூசிகள், கீறல்கள் விழாமல் தடுக்க | இங்கே கிளிக் செய்து வாங்கவும் |
இந்த 10 விஷயங்களைப் பக்காவாக நீங்கள் பின்பற்றினால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் குறையவே குறையாது!


