Google Pixel 11 லீக்: கூகுள் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படி கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11) ஸ்மார்ட்போனின் லீக் விபரங்கள் வெளியாகி மார்க்கெட்டை அதிரவைத்துள்ளது. 100X ஜூம் கேமரா, டென்சார் ஜி6 சிப், 5000mAh பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்க உள்ளது. இந்த கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனானது, வரும் ஆகஸ்ட் மாதத்தில் (August 2026 launch) வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டை தொடர்ந்து, சில காரணங்களால் செப்டம்பர் மாதத்திலும் வெளியீடு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இதன் வருகைக்காக இந்திய மார்கெட்டிலும் வாடிக்கையாளர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
Google Pixel 11 leaked online
வெளியீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே ஆன்லைனில் இதன் ரெண்டர்கள் (Renders leaked online) லீக்கான ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் மற்றும் ஆன்லீக்ஸ் மூலமாக இந்த முதல் ரெண்டர்கள் வெளியாகியுள்ளன. ஆகவே, வரவிருக்கும் மாதங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். டிசைன், பர்ஃபாமென்ஸ், கேமரா போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் இந்த முறை கூகுள் பிரீமியம் காட்ட இருக்கிறது.
🔥 இன்றைய ட்ரெண்டிங்: 👉 மார்க்கெட் காலி! 200MP கேமரா, 7050mAh பேட்டரியுடன் இந்தியாவிற்கு வரும் OPPO Find X9 Ultra!
கசிந்த ரெண்டர்களின்படி, முந்தைய மாடல்களை விட இதன் பெசல்கள் (Thinner bezels) மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சிறந்த பார்வை அனுபவத்தை கொடுக்கும். ஸ்பீக்கர் கிரில் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port) அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. வலது புறத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் உள்ளன. இதுவே லேட்டஸ்ட்டாக கசிந்த பீச்சர்களாக இருக்கின்றன.
ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் வழக்கம்போல கூகுள் பிராண்ட் லோகோ மையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பீ கேமராவிற்காக பஞ்ச் ஹோல் கட்அவுட் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் முன்னணி நிறுவனங்களின் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இது களமிறங்க இருக்கிறது. இதில் பிரீமியம் ஜூமிங் வசதி கிடைக்க உள்ளது.
கூகுள் பிக்சல் 11 அம்சங்கள் (Google Pixel 11 Specifications):
சக்திவாய்ந்த கூகுள் டென்சார் ஜி6 (Google Tensor G6 processor) சிப்செட்டை இந்த கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 6.3 இன்ச் எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் மென்மையான பயன்பாட்டிற்காக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
Google Pixel 11 Triple rear camera
பின்பக்கத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple rear camera) மற்றும் பிளாஷ் கிடைக்கிறது. இதில் இரண்டு 48 எம்பி சென்சார்கள் (48MP sensors) இருக்கும் என்று கசிந்த தகவல்கள் கூறுகின்றன. எனவே, கூகுள் கேமரா தரத்தில் இது மார்க்கெட்டையே அதிரவைக்கும். தெளிவான புகைப்படங்களை எடுப்பதற்கு இந்த சென்சார்கள் மிகவும் உதவும்.
😲 இதையும் மிஸ் பண்ணிடாதீங்க: 👉 உஷார் மக்களே! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் 5 அதிரடி மாற்றங்கள்!
மேலும், கேமராவில் எவரும் எதிர்பாராத வகையில் 100X ஜூம் அம்சம் (100X zoom capability) கிடைக்கிறது. இதுபோக, வீடியோக்களுக்கு மேம்பட்ட சினிமாட்டிக் பிளர் (Cinematic blur) சப்போர்ட் கொடுக்க உள்ளது. ஆகவே, பிக்சல் போன்களுக்கே உரித்தான அல்ட்ரா பிரீமியம் கேமரா அவுட்புட் இதில் நிச்சயம் கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல, 5000mAh பேட்டரி (5000mAh battery) கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை, முந்தைய மாடலை விட சுமார் ரூ.5,000 வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விலையிலும் இது சற்று பிரீமியமாக இருக்கும்.
ஆதாரம் (Source): androidheadlines