வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில், டெலிகிராம் (Telegram) செயலி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான புதிய அப்டேட்டை அறிமுகம் செய்து மார்க்கெட்டையே அதிரவைத்துள்ளது. டெலிகிராம் 12.6.0 வெர்ஷனில் (Telegram update 12.6.0) வெளியாகியுள்ள இந்த அதிரடியான அப்டேட்டில் பல ஏஐ (AI) அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சங்களை இப்போது விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
Telegram புதிய அப்டேட்: AI Editor, Live Photos முழு விபரம்!
குறிப்பாக, இந்த புதிய அப்டேட்டில் ஏஐ டெக்ஸ்ட் எடிட்டர், அட்வான்ஸ்டு போல் பீச்சர்ஸ், லைவ் போட்டோஸ் சப்போர்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான டாக்குமெண்ட் ஸ்கேனர் (Document scanner) என பல அட்டகாசமான வசதிகள் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாஸான அம்சங்களின் முழு விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
Telegram AI Text Editor Update
டெலிகிராம் ஏஐ டெக்ஸ்ட் எடிட்டர் அப்டேட்: டெலிகிராம் மெசேஜ் பாரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஏஐ எடிட்டர் (AI-powered text editor) பயனர்கள் டைப் செய்யும்போதே அவர்களின் மெசேஜ்களை திருத்தவும், மெருகூட்டவும் உதவுகிறது. இதன் மூலம் இலக்கணப் பிழைகளைச் சரிசெய்வது மட்டுமல்லாமல், டைப் செய்த செய்திகளை வேறு மொழிகளில் எளிதாக மொழிபெயர்க்கவும் (Translate messages) முடியும்.
மேலும், இந்த ஏஐ எடிட்டர் மூலம் பார்மல், ஷார்ட், கார்ப்பரேட், வைக்கிங் உள்ளிட்ட பலவிதமான ரைட்டிங் ஸ்டைல்களில் (Writing styles) மெசேஜ்களை மாற்றி எழுதலாம். இந்த அம்சம் ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல்களின் அடிப்படையில் இயங்குவதோடு, பயனர்களின் டேட்டா பாதுகாப்பிற்காக இது டெலிகிராமின் பிரத்யேகமான கக்கூன் நெட்வொர்க்கில் (Cocoon Network) ரகசியமாகச் செயல்படுகிறது.
Telegram Advanced Poll Features
டெலிகிராம் அட்வான்ஸ்டு போல் பீச்சர்ஸ்: டெலிகிராம் குரூப் மற்றும் சேனல்களில் பயன்படுத்தப்படும் வாக்கெடுப்பு (Polls) அம்சத்திலும் பல மாஸான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனிமேல் வாக்கெடுப்புக் கேள்விகளுடன் மீடியா பைல்கள் அல்லது லொகேஷன்களை (Attach media or locations) எளிதாக இணைக்க முடியும். இது வாக்கெடுப்புகளை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும்.
அதுமட்டுமின்றி, வாக்கெடுப்பில் கலந்துகொள்பவர்கள் புதிய பதில்களைப் பரிந்துரைக்கவும், வாக்களித்தவர்களின் விவரங்களைப் பார்க்கவும் (See voter identities) புதிய அப்டேட் அனுமதிக்கிறது. வாக்கெடுப்பிற்கு நேர வரம்பு அமைப்பது, முடிவுகளை மறைத்து வைப்பது போன்ற கூடுதல் கட்டுப்பாடுகளும் இதில் நேர்த்தியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
Telegram Live Photos and Scanner
டெலிகிராம் லைவ் போட்டோஸ் மற்றும் ஸ்கேனர்: இந்த புதிய அப்டேட்டில் ஐஓஎஸ் லைவ் போட்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மோஷன் போட்டோஸ் (Motion Photos) சப்போர்ட் பிரம்மாண்டமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனிமேட்டட் புகைப்படங்களை லைவ், லூப் அல்லது பவுன்ஸ் (Live, Loop, Bounce) ஆகிய மூன்று விதமான ஸ்டைல்களில் பயனர்கள் பிளே செய்து பார்க்கலாம்.
ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்காக பிரத்யேகமாக ஆப்பிற்குள்ளேயே செயல்படும் டாக்குமெண்ட் ஸ்கேனர் (Built-in document scanner) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல பக்கங்களை ஸ்கேன் செய்து பிடிஎப் (PDF) பைலாக மாற்றுவது, தானாக பேக்ரவுண்டை நீக்குவது போன்ற அட்டகாசமான வேலைகளை எளிதாகச் செய்யலாம். இது பயனர்களுக்கு ஒரு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.!
Android via (Google Play Store) and APK from telegram.org/android