இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் ரியல்மி நிறுவனம், தனது பி-சீரிஸில் மிகப்பெரிய பேட்டரி திறன் கொண்ட புதிய 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்கத் தயாராகிவிட்டது.
குறிப்பாக Realme P4s 5G (ரியல்மி பி4எஸ் 5ஜி) என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரபல பிளிப்கார்ட் (Flipkart) தளம் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. இதில் என்னென்ன பிரம்மாண்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
Realme P4s 5G Specifications
ரியல்மி பி4எஸ் 5ஜி அம்சங்கள்: இந்த போனில் 6.78-இன்ச் 1.5K சாம்சங் எம்14 அமோலெட் டிஸ்பிளே (Samsung M14 AMOLED Display) வழங்கப்பட்டுள்ளது. இது 1,272 × 2,772 பிக்சல்கள் அடர்த்தி, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் 6,500 நிட்ஸ் உச்சக்கட்ட பிரைட்னஸ் (6,500 Nits Peak Brightness) ஆதரவைக் கொண்டுள்ளது.
செயல்திறனைப் பொறுத்தவரை அதிவேக மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 7400 Ultra 5G Chipset) மற்றும் பிரத்யேக ஹைப்பர் விஷன் பிளஸ் ஏஐ சிப் (HyperVision+ AI Chip) இணைக்கப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்காக 7,000 சதுர மிமீ வேப்பர் சேம்பர் லிக்விட் கூலிங் சிஸ்டம் (7,000mm² VC Cooling) இதில் உள்ளது.
நினைவகத்தைப் பொறுத்தவரை 6GB/8GB/12GB ரேம் மற்றும் 128GB/256GB மெமரி ஆப்ஷன்களில் இது வெளிவருகிறது. மேலும் இதில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் அதிநவீன IP66, IP68, IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (IP69 Dust & Water Resistance) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Realme P4s 5G Camera Setup
ரியல்மி பி4எஸ் 5ஜி கேமரா அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஓஐஎஸ் ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா (50MP Primary Camera with OIS) மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் இடம்பெற்றுள்ளது.
முன்பக்கத்தில் செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா (16MP Selfie Camera) வழங்கப்பட்டுள்ளது. ஏஐ போர்ட்ரெய்ட் மற்றும் நைட் மோட் உள்ளிட்ட பல புதிய கேமரா மோடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
Realme P4s 5G Battery and Price
ரியல்மி பி4எஸ் 5ஜி பேட்டரி மற்றும் விலை: இந்த போனின் மிக முக்கிய சிறப்பம்சமே இதன் ராட்சத 8,000mAh பேட்டரிதான் (8000mAh Massive Battery). இந்த சக்திவாய்ந்த பேட்டரியை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (80W Fast Charging) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 முதல் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் தாராளமாகக் கிடைக்கும்.
விலையைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 முதல் ரூ.35,000 பட்ஜெட் விலைக்குள் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று நினைப்பவர்களுக்கு இந்த போன் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இது போன்ற சுடச்சுட புதிய மொபைல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டெக் வாய்ஸ் தமிழ் (Tech Voice Tamil) தளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
