Vivo V29e: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்?

விவோ வி29இ: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்? Vivo V29e: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்? Vivo: விவோ வி29இ என்ற பிரீமியம் வடிவமைப...

Vivo V29e: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்?
விவோ வி29இ: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்?

Vivo V29e: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்?

Vivo: விவோ வி29இ என்ற பிரீமியம் வடிவமைப்புடன் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனின் டீசரை Vivo நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்த போன் சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், Vivo V29E தொலைபேசியின் இந்திய வெளியீட்டு தேதியை Vivo அறிவிக்கவில்லை. ஆனால் இந்த போன் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. விவோ வி29இ போனில் 3D வளைந்த டிஸ்ப்ளே, பளபளப்பான பின்புற பேனல், டூயல் ரியர் கேமரா, கேமரா லென்ஸைச் சுற்றி கோல்டன் ரிங், வால்யூம் கீ மற்றும் வலது பக்கத்தில் பவர் பட்டன் என பல அற்புதமான அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த போனின் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி29இ ஸ்மார்ட்போனில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 64MP முதன்மை கேமரா + 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50MP கேமராவும் உள்ளது.

குறிப்பாக இந்த போனின் செல்ஃபி கேமரா ஆட்டோ ஃபோகஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போனின் கேமராக்கள் மூலம் அசத்தலான புகைப்படங்களை எடுக்கலாம். மேலும், இந்த புத்தம் புதிய விவோ வி29இ ஸ்மார்ட்போன் LED ஃபிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் வருகிறது.

Vivo V29e: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்?
விவோ வி29இ: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்?

அற்புதமான Vivo V29e ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி சேமிப்பு ஆதரவு உள்ளது. இது நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இந்த ஃபோன் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி29இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்டுடன் வெளியிடப்படும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மீடியாடெக் சிப்செட்டை விட சக்தி வாய்ந்தது. எனவே இந்த விவோ வி29இ போனை நீங்கள் நம்பிக்கையுடன் வாங்கலாம். மேலும், இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும்.

விவோ வி29இ ஸ்மார்ட்போனில் முழு HD பிளஸ் 3D வளைந்த டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிளே பகுதியில் நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

விவோ வி29இ ஸ்மார்ட்போனில் 4600 mAh பேட்டரி உள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. மேலும், இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த விவோ வி29இ போன் இந்தியாவில் ரூ.25,000 விலையில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக OnePlus Nord போன்கள் இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கின்றன. ஆனால் அந்த போன்களை விட இந்த விவோ வி29இ போன் தரமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று நீங்கள் நம்பலாம்.

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,365,tecno,4,telecom,17,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,362,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: Vivo V29e: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்?
Vivo V29e: வருகிறது புதிய VIVO போன்.. என்ன மாடல்?
https://i0.wp.com/www.techvoicetamil.com/wp-content/uploads/2023/08/vivo_v29e_artistic_red_1692260478638.png?resize=950%2C534&ssl=1
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2023/08/vivo-v29e-vivo_52.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2023/08/vivo-v29e-vivo_52.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content