ரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் OIS கேமரா 1 டிபி மெமரி.. 6000mAh பேட்டரி.. கொண்ட Samsung Galaxy M34

OIS கேமரா, மாலி கிராபிக்ஸ் கார்டு, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி, 1TB மெமரி சப்போர்ட் போன்ற மேம்பட்ட அம்சங்களை கொண்ட Samsung Galaxy M34 போன் பட்ஜெட் விலையில் அதிரடி சலுகையாக அறிவிக்கப்பட்டு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

Samsung Galaxy M34 விவரக்குறிப்புகள்

இந்த Samsung Galaxy மாடல் 6.5-inch (1080 × 2340 pixels) Full HD Plus (FHD+) Super AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது இன்ஃபினிட்டி-யு HDR மாடல் டிஸ்ப்ளே ஆகும். டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000 nits பீக் பிரைட்னஸ் ஆதரவுடன் வருகிறது.

ரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் OIS கேமரா 1 டிபி மெமரி.. 6000mAh பேட்டரி.. கொண்ட Samsung Galaxy M34 

இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1 ஓஎஸ் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் சிப்செட் மூலம் ஃபோன் இயக்கப்படுகிறது.

இது Mali-G68 GPU கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது. இந்த சாம்சங் போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என 2 மாடல்களில் கிடைக்கிறது. கூடுதலாக, மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு 1 டிபி வரை வழங்கப்படுகிறது.

எனவே, இரட்டை நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு ஸ்லாட்டுகள் வருகின்றன. இது 50 எம்பி பிரதான கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் டிரிபிள் ரியர் சிஸ்டத்துடன் வருகிறது. இது ஒரு OIS கேமரா. இது 13 எம்பி செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. இதேபோல், டைப்-சி ஆடியோ, டால்பி அட்மாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் OIS கேமரா 1 டிபி மெமரி.. 6000mAh பேட்டரி.. கொண்ட Samsung Galaxy M34 

ப்ளூடூத் 5.3, வைஃபை 801, இரட்டை அலைவரிசை ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற இணைப்பு அம்சங்களுடன் இந்த போன் வருகிறது. மிட்நைட் ப்ளூ, ப்ரிசம் சில்வர் மற்றும் வாட்டர்ஃபால் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

Samsung Galaxy M34 – Price in India

இந்த போன் ஜூலை 15 முதல் விற்பனைக்கு வரும். 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாடல் ரூ.18,999 மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாடல் ரூ.20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில், அமேசான் தற்போது ரூ.1500 உடனடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்த தள்ளுபடியைப் பெற, நீங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி ரூ.12,250 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. எனவே, ரூ.18,999 மதிப்புள்ள 6ஜிபி ரேம் மாடலை வெறும் ரூ.17,499க்கு வாங்கலாம். நல்ல கேமரா, பெரிய பேட்டரி மற்றும் நல்ல சிப்செட் கொண்ட சாம்சங் மாடல் வேண்டுமானால், இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
"/>