Jio vs Airtel Recharge Plans: Best 84 Days Voice Plan!: இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்கள் (Telecom operators) வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் (Jio vs Airtel Recharge Plans) தற்சமயம் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் நுகர்வோரிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாகப் பலரும் தங்களது மொபைல் போன்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு சிம்களையும் இணைத்து வைத்துள்ளனர். இதில் எந்த சிம் கார்டை முதன்மை எண்ணாகவும், எதை இரண்டாவது எண்ணாகவும் வைப்பது என்பதை முடிவு செய்வது அந்தந்த நிறுவனங்களின் விலை நிர்ணயம் தான்.
Jio vs Airtel, பயனர்களுக்கு ஜாக்பாட்.! மாசம் ரூ.170 தான்!
தங்களது இரண்டாவது சிம் கார்டை செயல்பாட்டில் வைத்திருக்க உதவும், அதே சமயம் அதிக டேட்டா தேவைப்படாத ஒரு குறைந்த விலை ரீசார்ஜ் பேக்கை தேடும் வாடிக்கையாளர்களுக்கு, 84 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலம் (Service validity) கொண்ட சில பிரம்மாண்டமான வாய்ஸ்-ஓன்லி திட்டங்கள் (Voice-only plans) தற்சமயம் இரண்டு நிறுவனங்களிலும் தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன.
Reliance Jio Rs 448 Plan Benefits
ரிலையன்ஸ் ஜியோவின் பட்ஜெட் திட்ட விபரம்: ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் இந்த ரூ.448 ப்ரீபெய்ட் பேக் ஆனது ஒட்டுமொத்த செலவைக் கணிசமாகக் குறைக்கும் ஒரு சக்திவாய்ந்த (Powerful) சாய்ஸ் ஆகும். இதன் முக்கிய நன்மைகள் பின்வருமாறு:
- இத்திட்டத்தின் மூலம் நுகர்வோருக்கு 84 நாட்கள் முழுமையான வேலிடிட்டி காலம் வழங்கப்படுகிறது.
- இதில் இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் இலவசமாகப் பேசிக் கொள்ளும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited voice calls) மற்றும் மொத்தம் 1000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.
- இத்திட்டத்தில் வழக்கமான சலுகைகளாக ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற பிரத்யேக ஆப்ஸ்கள் மட்டுமே நுகர்வோருக்குக் கிடைக்கின்றன.
- இதில் எவ்வித தினசரி டேட்டா நன்மைகளும் மற்றும் 5ஜி நெட்வொர்க் ஆதரவும் வழங்கப்படவில்லை. அவசரத் தேவைகளுக்குப் பயனர்கள் தனியாக ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்கள் (Data vouchers) மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
Bharti Airtel Rs 469 Plan Benefits
பாரதி ஏர்டெல்லின் அட்டகாசமான திட்ட விபரம்: ஜியோவிற்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.469 ப்ரீபெய்ட் பேக் ஆனது கூடுதல் சலுகைகள் (Additional benefits) நிறைந்த ஒரு சிறந்த திட்டமாகும். இதன் விபரங்கள் பின்வருமாறு:
- இத்திட்டமும் நுகர்வோருக்கு முழுமையாக 84 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி காலத்தை அப்படியே வழங்குகிறது.
- இதில் தடையற்ற வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தம் 900 எஸ்எம்எஸ்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன.
- ஜியோவைப் போலவே இதிலும் வழக்கமான இணைய டேட்டா நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. திடீர் தேவைகளுக்குப் பயனர்கள் தனியாக டேட்டா பூஸ்டர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், இதில் கூடுதல் நன்மையாக 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவிற்கான இலவச அணுகல் கிடைக்கிறது. இவற்றுடன் இலவச ஹலோ டியூன்களும் நுகர்வோருக்குக் கொடுக்கப்படுகிறது.
எனவே வாங்குனா இப்படி ஒரு பட்ஜெட் ரீசார்ஜ் திட்டம் வாங்கணும்னு சொல்ற மாதிரி, ஸ்மார்ட்போனில் செகண்டரி சிம் கார்டை குறைந்த செலவில் உயிர்ப்போடு வைத்திருக்க நினைக்கும் இந்திய மக்களுக்கு, இந்த ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் (Jio vs Airtel Recharge Plans) டெலிகாம் சந்தையில் வெச்சி செஞ்சிட்டாங்கன்னு சொல்லும் அளவுக்குக் குறைந்த செலவில் நீண்ட வேலிடிட்டியைத் தரும் ஒரு அட்டகாசமான மாஸ் சாய்ஸ் (Mass choice) ஆகும்!
