Redmi Smart Fire TV 4K 43: ரெட்மி இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக நிறுவனம் மலிவு விலையி...
Redmi Smart Fire TV 4K 43: ரெட்மி இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக நிறுவனம் மலிவு விலையில் அற்புதமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தி வருவதால், அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், நிறுவனம் சமீபத்தில் 43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை (ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43) அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் ரெட்மி நிறுவனம் 43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியின் விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. 43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி செப்டம்பர் 29-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியை Amazon மற்றும் MI.com தளத்திலும் வாங்கலாம்.
பட்ஜெட் விலை.. புது Redmi Smart Fire TV 4K 43
Redmi Smart Fire TV 4K 43: 43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியின் விலை ரூ.24,999 என கூறப்படுகிறது. மேலும் எஸ்பிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1250 தள்ளுபடி கிடைக்கும். இது தவிர இந்த டிவிக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இப்போது இந்த டிவியின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பின்னர் இந்த டிவியின் டிஸ்ப்ளே 3840 x 2160 பிக்சல்கள், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், இந்த ரெட்மி டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் தொழில்நுட்பம் உள்ளது.
சுருக்கமாக, இந்த 43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது. குறிப்பாக புதிய டிவி மெட்டல் பெசல்-லெஸ் டிசைனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருளில் ரெட்மி அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் கேமிங் பிரியர்களை கவரும் வகையில் Mali-G52 MC1 GPU (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்டுள்ள செயலி மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.
43 இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் Fire TV ஓஎஸ் 7 இல் இயங்குகிறது. மேலும் இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. குறிப்பாக, Netflix, Disney+ Hotstar, Zee5, Sonylive, YouTube போன்ற பல்வேறு ஆப்களை இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தலாம்.
Redmi Smart Fire TV 4K 43யில் அலெக்சா குரல் ஆதரவுடன் ஸ்மார்ட் ரிமோட் உள்ளது. எனவே இந்த ரிமோட் மூலம் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுடன் டிவியை அழகாக இயக்கலாம். இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்மார்ட் ரிமோட்டில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மியூசிக் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன.
இந்த அதிநவீன Redmi 4K Smart TV ஆனது Dolby Audio, DTS-HD மற்றும் DTS: Virtual X உள்ளிட்ட ஆடியோ அம்சங்களுடன் 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியில் Wi-Fi 802.11 ac, AirPlay 2, Miracast, Bluetooth 5.0, HDMI போர்ட், USB போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன.
COMMENTS