Lava Blaze Pro 5G போன் இந்திய சந்தையில் 16GB RAM, 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பிரீமியம் வடிவமைப்பு போன்ற அம்சங...
Lava Blaze Pro 5G போன் இந்திய சந்தையில் 16GB RAM, 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பிரீமியம் வடிவமைப்பு போன்ற அம்சங்களுடன் அற்புதமான விலையில் கிடைக்கிறது.
Lava Blaze Pro விவரக்குறிப்புகள்
இது 5G மாடல். இந்த போன் 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) முழு HD+ (FHD+) LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 16.5 மில்லியன் வண்ண ஆதரவுடன் வருகிறது.
லாவா ஃபோன் ஆன்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Mali-G57 MC2 GPU கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது.
இந்த மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் வருகிறது. எனவே, 16ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. இது 1TB மைக்ரோ எஸ்டி கார்டையும் ஆதரிக்கிறது.
இது இரட்டை நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது. இந்த போன் 50 எம்பி பிரதான கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைட் கேமராவுடன் வருகிறது. இந்த கேமராவில் HD வீடியோ பதிவு ஆதரவு உள்ளது. இது 8 எம்பி செல்ஃபி கேமராவுடன் வருகிறது.
இந்த பிரதான கேமராவில் ஃபிலிம், ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ், அழகு, HDR, நைட், போர்ட்ரெய்ட் போன்ற பல்வேறு முறைகள் உள்ளன. இது 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது.
Lava Blaze Pro மாடல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்கள் போதும். பேட்டரி 30 மணிநேர பேச்சு நேரத்தையும், 510 நிமிட வீடியோ பிளேபேக் நேரத்தையும் வழங்க முடியும்.
இது டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது. இந்த போனின் இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இது 5G SA, Dual 4G, Wi-Fi 802, Bluetooth 5.10 மற்றும் GPS உடன் வருகிறது.
இந்த லாவா மாடல் ஸ்டார்ரி நைட் மற்றும் ரேடியன்ட் பேர்ல் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. பல வசதிகள் கொண்ட இந்த போன் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலை வெறும் ரூ.12,499க்கு வாங்கலாம்.
Amazon, Lava India மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். அக்டோபர் 3 முதல் ஆர்டர் செய்து வாங்கலாம். வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, 50 எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற நல்ல வசதிகளுடன் கூடிய இந்த போனை மிக மலிவான விலையில் பெறலாம்.
COMMENTS