Samsung Galaxy M44 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, SIG சான்றிதழ் தளத்தில் SM-M446K என்ற மாதிரி எண்ணுடன் தொலைப...
Samsung Galaxy M44 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, SIG சான்றிதழ் தளத்தில் SM-M446K என்ற மாதிரி எண்ணுடன் தொலைபேசி காணப்பட்டது. எனவே விரைவில் இந்த போன் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்தும் வசதி, டிரிபிள் ரியர் கேமரா என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் சிறப்பம்சங்களை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
Samsung Galaxy M44 Specifications
சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேயுடன் வெளிவரும் என்பதால் இந்த போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samsung Galaxy M44 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 888 சிப்செட்டுடன் அறிமுகமாகும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் அடிப்படையில் இந்த அற்புதமான சாம்சங் போன் வெளிவரவுள்ளது. இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.
இந்த Samsung Galaxy M44 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கும் துணைபுரிகிறது. அதாவது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்தும் வசதி உள்ளது.
Samsung Galaxy M44 ஸ்மார்ட்போனில் 50MP முதன்மை கேமரா + 2MP டெப்த் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8MP கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
Samsung Galaxy M44 ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். அப்போது 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த அற்புதமான கேலக்ஸி எம்44 போன் வெளிவரவுள்ளது.
இதில் 5ஜி, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், வைஃபை 802.11, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. Samsung Galaxy M44 ஸ்மார்ட்போன். மேலும் இந்த Galaxy M44 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS