POCO X6 Pro ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்?,Poco X6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது
POCO X6 Pro ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்?
POCO பிராண்ட் தனது புதிய Poco X6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. அதற்கு முன்னதாக POCO X6 Pro போனின் ஸ்கோர் தகவல் வெளியாகியுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக Poco தனது புதிய ஸ்மார்ட்போன் தொடர் Poco X6 தொடர் சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. ஜனவரி 11ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் POCO X6 மற்றும் POCO X6 Pro ஆகிய 2 மாடல்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் வருகையை உறுதி செய்யும் டீசர் வீடியோ கடந்த வாரம் வெளியானது. ஹர்திக் பாண்டியா அதில் தோன்றி Poco X6 தொடரின் வருகையை "The Hunt Begins" என்ற கோஷத்துடன் உறுதிப்படுத்தினார். இவர் போகோ பிராண்டின் தூதுவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக் பாண்டியா நடித்துள்ள இந்த டீசர் வைரலாகி வருகிறது. Poco X6 போனுக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன.
POCO X6 Pro
இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் வெளியிடப்பட்ட Poco X6 Pro சாதனம் MediaTek Dimensity 8300 SoC மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்த இடைப்பட்ட ஸ்மார்ட்போனின் செயல்திறன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சாதனம் 1.4 மில்லியன் புள்ளிகளைப் பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட AnTuTu ஸ்கோர் தரவு, POCO X6 Pro ஸ்மார்ட்போன் சாதனம் 1,464,228 புள்ளிகளைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த மதிப்பெண்ணுடன், Poco X6 Pro சாதனம் சிறந்த செயல்திறன் கொண்ட இடைப்பட்ட ஸ்மார்ட்போனாக வெளிப்படுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், ஸ்மார்ட்போன் மறுபெயரிடப்பட்ட Redmi K70E ஆகும். சியோமியின் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் இயங்குதளத்தை இயக்கும் போகோ வரிசையில் முதல் சாதனம் இந்த ஸ்மார்ட்போன் ஆகும். Poco X6 Pro சாதனம் 2 வருட முக்கிய மென்பொருள் புதுப்பிப்பு உத்தரவாதத்துடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் எந்த தடையும் இல்லாமல் ஆண்ட்ராய்டு 16 க்கு புதுப்பிக்கப்படும் என்று Poco உறுதியளித்துள்ளது. இப்போது அமேசான் தளம் இந்த ஸ்மார்ட்போனுக்கான விளம்பரங்களால் நிரம்பியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் இதோ.
POCO X6 Pro விவரக்குறிப்புகள்
அதன்படி, Poco X6 Pro சாதனம் 6.7" LTPS AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது 1.2K தெளிவுத்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் சாதனமாகும்.
இது OIS உடன் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் டிரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. இது 67W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. செயல்திறன் பிரிவில் ஸ்மார்ட்போன் நேரடி சிக்ஸ் அடித்துள்ளது. மற்ற பிரிவில் பல எல்லைகளை குவித்தது.
COMMENTS