POCO C85x 5G: ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து பல மலிவு விலை மொபைல்களை அறிமுகம் செய்து வரும் போகோ நிறுவனம் (POCO India), தற்போது தனது அடுத்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனான POCO C85x 5G மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. மார்ச் 10 ஆம் தேதி (March 10 launch date) இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இதற்கான மைக்ரோசைட் மற்றும் டீசர்கள் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நேரலையில் உள்ளன.
POCO C85x 5G Specifications and Price in India
இந்த மொபைலின் மிக முக்கிய சிறப்பம்சமாக (POCO C85x 5G specifications) இதன் பேட்டரி பேக்கப் பார்க்கப்படுகிறது. "பேட்டரி கா கிலாடி" (Battery ka khiladi) என்ற டேக்லைனுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில், தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை நீடித்து உழைக்கும் 6300mAh முரட்டு பேட்டரி (6300mAh massive battery) பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse charging) ஆதரவுடனும் வரவுள்ளது.
புதிய 5G போன் வாங்க ஆசையா? 6500mAh முரட்டு பேட்டரி மற்றும் 5000 Nits பிரைட்னஸ் உடன் சத்தமே இல்லாமல் பிரீமியம் லுக்கில் வெளியாகியுள்ளது Vivo X300 FE ஸ்மார்ட்போன்! முழு விபரம் இதோ! 👉 புதுசா விவோ போன் வாங்கப் போறீங்களா? 5000 Nits பிரைட்னஸ், 6500mAh பேட்டரியுடன் வெளியானது Vivo X300 FE!
டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, இதில் 6.9 இன்ச் பெரிய டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz display) கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவில், இதன் பின்புறம் 32MP AI கேமரா (32MP AI rear camera) கொண்ட அட்டகாசமான டூயல் டோன் டிசைன் (Dual-tone design) இடம்பெற்றுள்ளது. இதுதவிர, சிறந்த பெர்ஃபார்மன்ஸ் வழங்குவதற்காக பவர்ஃபுல்லான 5G சிப்செட் மற்றும் 200% சூப்பர் வால்யூம் ஆதரவுடன் கூடிய 3.5mm ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.
25,000 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு போன் வாங்க நினைத்தால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! 7000mAh பேட்டரி மற்றும் லேட்டஸ்ட் Android 16 ஓஎஸ்-உடன் இந்தியாவை அதிரவைக்க வந்துவிட்டது மோட்டோரோலாவின் புது போன்! 👉 இலவச Google Gemini Pro, 7000mAh பேட்டரியுடன் இந்தியாவை அதிரவைக்க வந்த Motorola Edge 70 Fusion!
எதிர்பார்க்கப்படும் விலை (Expected Price in India)
இந்த POCO C85x 5G மொபைல், சமீபத்தில் வெளியான POCO C85 5G மாடலின் சற்றே குறைந்த வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 10,000 ரூபாய்க்குள் (POCO C85x 5G expected price in India) இருக்கலாம் என டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த விலையில் ஒரு சிறந்த 5G ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு (Best budget 5G phone in India) இது ஒரு அற்புதமான தேர்வாக அமையும்.