Google Gemini AI Pro: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் வழங்கி வந்த முக்கிய இலவசச் சலுகை ஒன்றை அதிரடியாக நீக்கியுள்ளது. குறிப்பாக, ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட்டு வந்த கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ (Google Gemini AI Pro) சந்தா தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனாலேயே இந்த Google AI Pro சலுகை நீக்கத்திற்குப் பதிலாக ஜியோ என்ன புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ தனது தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் சுமார் ரூ.35,100 மதிப்புள்ள Google Gemini AI Pro சந்தாவை 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கி வந்தது. ஆனால், இப்போது புதிதாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Google AI Pro Benefit முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஏற்கனவே இந்தச் சலுகையை கிளைம் (Claim) செய்து பயன்படுத்தி வருபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய வாடிக்கையாளர்களுக்கு Google AI Pro சலுகை நீக்கப்பட்டு இருப்பது சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், அதற்குப் பதிலாக ஜியோ நிறுவனம் புதிய பிரீமியம் சந்தாக்களைத் தனது திட்டங்களில் இணைத்துள்ளது. அதன்படி, கேன்வா புரோ (Canva Pro) மற்றும் கேன்வா புரோ லைட் (Canva Pro Lite) ஆகிய இரண்டு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் ரூ.399 திட்டத்தில் கிடைக்கும் புதிய சலுகைகளைப் பார்க்கலாம்.
இதையும் படிக்கவும்: டேட்டா பத்தலையா? ₹1590 மதிப்புள்ள சலுகையை இலவசமாக தரும் Jio!
ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 Prepaid Plan)
புதிய மாற்றத்தின்படி, சுமார் ரூ.4,000 மதிப்புள்ள கேன்வா புரோ (Canva Pro) சந்தா ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்துடன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி அதிவேக டேட்டா (High-speed Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (Free SMS) சலுகைகள் கிடைக்கின்றன.
மேலும், கூடுதல் பொழுதுபோக்குச் சலுகைகளாக ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் (JioHotstar Mobile + Hollywood) மற்றும் ஜியோடிவி வழியாக ஃபேன்கோட் (FanCode) அணுகல் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதுபோக, 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் (JioAICloud Storage) வசதியும் இதில் அடங்கும். மற்ற எந்த ஜியோ திட்டத்திலும் இந்த முழுமையான கேன்வா புரோ சந்தா கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கவும்: Jio சிம் வச்சிருக்கீங்களா? தினமும் 3GB டேட்டா தரும் 2 பிளான்கள்!
ஜியோ கேன்வா புரோ லைட் சலுகை (Jio Canva Pro Lite Offer)
அடுத்ததாக, ரூ.1,590 மதிப்புள்ள 12 மாதங்களுக்கான கேன்வா புரோ லைட் (Canva Pro Lite) சந்தா ஜியோவின் பல ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கிறது. குறிப்பாக, ரூ.349 திட்டம் அல்லது தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு மேல் வழங்கும் எந்தவொரு ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தையும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 1 வருட சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தச் சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலி (MyJio App) உள்ளே சென்று அதனை கிளைம் செய்து கொள்ள வேண்டும். ஆனால், ஒரு ஜியோ மொபைல் எண்ணிற்கு ஒரு முறை மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும். எனவே, Google AI Pro Benefit சலுகையைப் போலவே இந்தப் புதிய சலுகையையும் ஜியோ எப்போது வேண்டுமானாலும் மாற்ற வாய்ப்புள்ளது.
ஆகவே, இந்த இலவச கேன்வா புரோ மற்றும் கேன்வா புரோ லைட் சலுகைகளைப் பயன்படுத்த விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்கள் தகுதியான திட்டங்களை ரீசார்ஜ் செய்து உடனடியாக மைஜியோ செயலியில் கிளைம் செய்து கொள்வது சிறந்தது. வரும் நாட்களில் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் மேலும் பல புதிய டிஜிட்டல் சந்தாக்கள் இணைய வாய்ப்புள்ளது.


