முன்னதாக பார்தி ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற ஒரு இலவச ரீசார்ஜ் சலுகையை அறிவித்திருந்தது. அதற்குப் போட்டியாக இப்போது ரிலையன்ஸ் ஜியோவும் தனது பிரபலமான மாதாந்திரத் திட்டங்களில் இந்தச் சலுகையைக் கொண்டு வந்துள்ளது. தற்போது மைஜியோ செயலி (MyJio App) உள்ளே இந்த இலவச ரீசார்ஜ் சலுகை நேரடியாகக் காட்டப்படுகிறது.
ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 299 Prepaid Plan)
இந்த Jio Free Recharge Offer சலுகையின் கீழ் வரும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு முழுமையாக 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் தினசரி டேட்டா வரம்பு (Daily Data Limit) 1.5 ஜிபியாக வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு நாளைக்குச் சராசரியாக வெறும் ரூ.10.68 செலவில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid Plan)
அடுத்ததாக, அதிக டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை விரும்புவோருக்கு ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும். இதில் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா (High-speed Data) மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அத்துடன், தகுதியான 5ஜி வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது.
மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) ஓடிடி சந்தா ஆகியவையும் இதில் அடங்கும். இதுபோக, 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் (JioAICloud Storage) மற்றும் ரூ.1,590 மதிப்புள்ள 12 மாதங்களுக்கான கேன்வா புரோ லைட் (Canva Pro Lite) சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆகவே, மாதாந்திர ரீசார்ஜ் செய்யத் திட்டமிட்டுள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலி (MyJio App) வழியாக ரூ.299 அல்லது ரூ.349 திட்டத்தைத் தேர்வு செய்து இந்த Jio Free Recharge Offer சலுகையைப் பெறலாம். ரீசார்ஜ் செய்த பிறகு கிடைக்கும் இலவச ரீசார்ஜ் வவுச்சரை அடுத்தடுத்த ரீசார்ஜ்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


