இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாகப் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் மோட்டோரோலா (Motorola) நிறுவனம், தனது எட்ஜ் 70 வரிசையில் அடுத்த புதிய போனைக் களமிறக்கத் தயாராகிவிட்டது. முன்னதாக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் டீஸ் செய்யப்பட்டு வந்த இந்த ஸ்மார்ட்போன், இப்போது மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ (Motorola Edge 70 Neo) என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த Motorola Edge 70 Neo போனின் இந்திய வெளியீட்டுத் தேதி மற்றும் சிறப்பம்சங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள மைக்ரோசைட் (Microsite) பக்கத்தின்படி, இந்தப் புதிய ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 24-ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 70, எட்ஜ் 70 ஃபியூஷன், எட்ஜ் 70 ப்ரோ, எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் மற்றும் எட்ஜ் 70 மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த நியோ மாடல் வருகிறது.
அந்த வகையில் பிளிப்கார்ட் டீசர் பக்கத்தில் இந்தப் போன் அடர் பச்சை (Dark Green) நிறத்திலும், சதுர வடிவிலான பின்புற கேமரா அமைப்புடனும் (Square Camera Module) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேமரா வளையத்தில் உள்ள குறியீடுகள் மூலம் இதில் 50 எம்பி சோனி லைட்டியா சென்சார் (50MP Sony LYTIA Sensor) மற்றும் ஓஐஎஸ் (OIS) வசதி இருப்பது உறுதியாகியுள்ளது. முதலில் இந்தப் போனின் உறுதி செய்யப்பட்ட முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ அம்சங்கள் (Motorola Edge 70 Neo Specifications)
நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்த Motorola Edge 70 Neo ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) வழங்கப்படுகிறது. அத்துடன், மிகப் பெரிய 7,000mAh பேட்டரி (7,000mAh Battery), 6.8-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்ப்ளே (6.8-inch 1.5K AMOLED Display) மற்றும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா (50MP Main Camera) ஆகியவை இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளியான லீக் தகவல்களின்படி, இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) கொண்ட திரைக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு (Corning Gorilla Glass 7i), 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (45W Fast Charging) மற்றும் 32 எம்பி செல்ஃபி கேமரா (32MP Selfie Camera) ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. அத்துடன், தூசி மற்றும் லேசான தண்ணீர் பட்டால் பாதிப்பில்லாத ஐபி64 ரேட்டிங் (IP64 Dust and Water Resistance), ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளம் மற்றும் 4 வருட ஓஎஸ் அப்டேட்கள் (4 Years OS Upgrades) கிடைக்க வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் மாடல்கள் (Expected Price & Variants)
அடுத்ததாக, கீக்பெஞ்ச் (Geekbench) தகவல்களின்படி இந்தப் போன் 6ஜிபி ரேம் (6GB RAM) மற்றும் அதிகபட்சமாக 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் (8GB RAM + 256GB Storage) வசதியுடன் விற்பனைக்கு வரக்கூடும். மவுண்டன் வியூ (Mountain View), மில்க்கி ப்ளூ (Milky Blue), சேஜ் (Sage) மற்றும் கிரே லிலாக் (Gray Lilac) ஆகிய நான்கு கவர்ச்சிகரமான பான்டோன் நிறங்களில் (Pantone Finishes) இது வெளியாக உள்ளது.
விலையைப் பொறுத்தவரையில், தற்போது ரூ.30,999 ஆரம்ப விலையில் விற்பனையாகும் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன் (Motorola Edge 70 Fusion) மாடலுக்குக் கீழே, அதாவது சுமார் ரூ.25,000 முதல் ரூ.28,000 பட்ஜெட்டிற்குள் இது அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.
ஆகவே, பெரிய திரை மற்றும் நீண்ட நேரம் தாங்கும் 7,000mAh பேட்டரி கொண்ட மிட்-ரேஞ்ச் 5ஜி போனை (Mid-range 5G Phone) எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த Motorola Edge 70 Neo ஒரு சிறந்த தேர்வாக அமையும். நவம்பர் 24-ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் விற்பனை சலுகைகள் வெளியாக உள்ளன.

