சீனா ஸ்மார்ட்போனை ஓட விடும் இந்திய நிறுவனம்.. 6.5 இன்ச் பன்ஞ் ஹோல் டிஸ்பிளே.. 4950mAh பேட்டரி.. எந்த போன்?

Lava தனது Lava Yuva 3 ஸ்மார்ட்போனை இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் லாவா நிறுவனம் மீண்டும் ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதாவது இந்திய நிறுவனமான லாவா தனது Lava Z34 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக சீன நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த Lava Z34 போன் மலிவு விலையில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

சீனா ஸ்மார்ட்போனை ஓட விடும் இந்திய நிறுவனம்.. 6.5 இன்ச் பன்ஞ் ஹோல் டிஸ்பிளே.. 4950mAh பேட்டரி.. எந்த போன்?

Lava Z34 Specifications

Lava Z34 விவரக்குறிப்புகள்: Lava Z34 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. குறிப்பாக, 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த Lava Z34 ஸ்மார்ட்போன் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் அறிமுகமாகும்.

குறிப்பாக, Lava Z34 ஃபோன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் அறிமுகமாகும். பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, 4950எம்ஏஎச் பேட்டரி, 10W சார்ஜிங், மீடியாடெக் ஜி35 சிப்செட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் லாவா இசட்34 போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இரண்டு வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட லாவா யுவா 3 போன் ரூ.6,799க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

சீனா ஸ்மார்ட்போனை ஓட விடும் இந்திய நிறுவனம்.. 6.5 இன்ச் பன்ஞ் ஹோல் டிஸ்பிளே.. 4950mAh பேட்டரி.. எந்த போன்?

Lava Yuva 3 Specifications

லாவா யுவா 3 விவரக்குறிப்புகள்: இந்த ஃபோன் 6.5 இன்ச் பஞ்ச் ஹோல் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே 1600 × 720 பிக்சல்கள், 90Hz புதுப்பிப்பு வீதம், 269 PPI பிக்சல் அடர்த்தி மற்றும் 16.7 மில்லியன் வண்ண ஆதரவைக் கொண்டுள்ளது.

லாவா யுவா 3 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யூனிசாக் டி606 சிப்செட் உள்ளது. அதன்பின் லாவா யுவா 3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், மாலி-ஜி57 எம்சி2 ஜிபியூ கிராபிக்ஸ் கார்டு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இந்த ஃபோனில் 13 MP பிரதான கேமரா + AI (AI) லென்ஸ் + VGA (VGA) மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த கேமராவில் HDR, Portrait, AI, Night, Pro உள்ளது. , ஸ்லோ மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Time lapse) வரும். மேலும், இந்த லாவா யுவா 3 போனில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.

Lava Yua 3 ஆனது 5000mAh பேட்டரியுடன் வருகிறது. பின்னர் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் இதனுடன் வழங்கப்படுகிறது. Type-C Cable support, Side Fingerprint Sensor போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மலிவான விலையில் கிடைப்பதால் நம்பிக்கையுடன் வாங்கலாம்.

அதாரம் 

கருத்துரையிடுக