இந்நிலையில், ஜியோ மீண்டும் இந்தியாவில் மலிவு விலையில் பீச்சர் போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது BIS சான்றிதழ் தளத்தில் நிறுவனத்தின் பீச்சர் போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
அதாவது, தற்போது JBB121B1 மாதிரி எண் கொண்ட Jio பீச்சர் ஃபோன் BIS சான்றிதழ் இணையதளத்தில் உள்ளது. இது Jio Bharat 2 போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குறைந்த விலையில் கிடைக்கும் ஜியோ பாரத் போன் நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோன்று இந்த Jio Bharat 2 போன் மலிவு விலையில் அற்புதமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது Jio Bharat 2 போனின் விவரக்குறிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த போனின் விவரக்குறிப்புகள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஜியோ பாரத் போன் ரூ.999 விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜியோ பாரத் போன் மாடலின் அம்சங்களைக் கூர்ந்து கவனிப்போம்.
Jio Bharat Phone Specifications
Jio Bharat போன் விவரக்குறிப்புகள்: ஜியோ பாரத் போனில் ஒரு சிம் கார்டை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது 4G VoLTE ஆதரவைக் கொண்டுள்ளது, எனவே குரல் அழைப்பு மற்றும் இணைய அனுபவம் உயர் தரத்தில் இருக்கும்.
இதில் 1.77 இன்ச் TFT டிஸ்ப்ளே உள்ளது. இது காட்சிக்குக் கீழே ஒரு நல்ல கீபேடைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போனின் டிஸ்ப்ளே சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. ஜியோ சினிமா, ஜியோ சாவன் போன்ற ஜியோ ஆப்ஸ் இதில் நிறுவப்பட்டுள்ளது.
ஜியோ பாரத் போன் 1000mAh நீக்க முடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த போனில் 128 ஜிபி SD கார்டு ஆதரவு உள்ளது.
3.5எம்எம் ஆடியோ ஜாக், 0.3 எம்பி கேமரா, டார்ச், எப்எம் ரேடியோ என பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அசத்தலான பீச் போன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

