iQOO Neo: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், குறிப்பாக கேமிங் பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிறுவனம் iQOO. குறைந்த விலையில் அதிக பெர்ஃபார்மன்ஸ் மற்றும் தரமான அம்சங்களைக் கொடுப்பதில் ஐகூ நிறுவனத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையான ஒரு மாடல் தான் ஐகூ நிறுவனத்தின் நியோ சீரிஸ் (iQOO Neo series). ஆனால், தற்போது ஐகூ ரசிகர்களுக்கு ஒரு சற்றே ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை (iQOO Neo series India 2026) அறிமுகம் செய்யப்போவதில்லை என ஐகூ நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளதாக ஒரு புதிய ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
பிரபல டெக் செய்தித் தளமான 91Mobiles வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டு இந்தியாவில் iQOO Neo 11 ஸ்மார்ட்போன் (iQOO Neo 11 launch in India) வெளியாகாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள் மத்தியிலும், குறிப்பாக பட்ஜெட் கேமர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9020mAh முரட்டு பேட்டரி மற்றும் 165Hz டிஸ்பிளேவுடன் இணையத்தில் கசிந்தது புதிய iQOO Z11 ஃபர்ஸ்ட் லுக்! 👉 9020mAh முரட்டு பேட்டரி! கேமர்களை மிரட்ட வரும் புதிய iQOO Z11 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
iQOO Neo சீரிஸ் ஏன் அவ்வளவு பிரபலம்?
ஐகூ நிறுவனத்தின் இந்த நியோ சீரிஸ் என்பது மிட்-ரேஞ்ச் விலையில், அதாவது சுமார் 35,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் ஒரு சூப்பர் ஹிட் சீரிஸ் ஆகும். ஃபிளாக்ஷிப் போன்களுக்கு இணையான அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸ், நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் தாக்குப் பிடிக்கும் முரட்டு பேட்டரி மற்றும் மின்னல் வேக ஃபாஸ்ட் சார்ஜிங் என அனைத்தையும் ஒருங்கே கொடுத்ததால், இந்த நியோ சீரிஸ் மொபைல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. கேமராவில் பெரிய அளவில் கவனம் செலுத்தாவிட்டாலும், பயனர்களுக்குத் தேவையான தரமான புகைப்படங்களை எடுக்க இந்த சீரிஸ் போன்கள் தவறியதில்லை.
கடந்த அக்டோபர் 2025-ல் சீனாவில் iQOO Neo 11 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமாக, சீனாவில் வெளியாகும் நியோ மாடல்கள் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனால், இந்த முறை ஐகூ நிறுவனம் தனது திட்டத்தை முற்றிலும் மாற்றியுள்ளது. இதன் மூலம், தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் iQOO Neo 10 மற்றும் iQOO Neo 10R ஆகிய இரண்டு போன்கள் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் கடைசி நியோ சீரிஸ் போன்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
வெறும் ₹18,999 விலையில் 7200mAh முரட்டு பேட்டரியுடன் வெளியானது iQOO Z11x 5G! முழு விபரம் உள்ளே! 👉 7200mAh முரட்டு பேட்டரி! கேமிங் பிரியர்களுக்காக வெளியானது iQOO Z11x 5G!
நியோ சீரிஸை தவிர்க்க என்ன காரணம்? (Reason behind skipping iQOO Neo 11)
ஐகூ நிறுவனம் ஏன் இவ்வளவு பெரிய மற்றும் வெற்றிகரமான ஒரு சீரிஸை இந்தியாவில் தவிர்க்க வேண்டும் (iQOO skips Neo series in India) என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது, உலகளாவிய சந்தையில் நிலவி வரும் மெமரி சிப்களுக்கான தட்டுப்பாடு தான். இந்த தட்டுப்பாட்டின் காரணமாக ஸ்மார்ட்போன் உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மொபைல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஓப்போ (OPPO) மற்றும் விவோ (Vivo) போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு விலைப்பிரிவிலும் பல போன்களைக் குவித்து சந்தையை நிரப்புவதைப் போல இல்லாமல், ஐகூ நிறுவனம் மிகவும் தெளிவான மற்றும் எளிமையான தயாரிப்பு அணுகுமுறையை பின்பற்ற விரும்புகிறது. வாடிக்கையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லாமல், ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட மற்றும் தரமான போனை மட்டுமே வழங்க ஐகூ திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, தனது ஃபிளாக்ஷிப் போன்களின் மீது அதிக கவனம் செலுத்துவதற்காக நியோ சீரிஸை இந்த ஆண்டு தவிர்க்க முடிவெடுத்துள்ளது.
ஐகூவின் புதிய ஃபிளாக்ஷிப் மற்றும் Z சீரிஸ் வியூகம் (Upcoming iQOO phones 2026)
நியோ சீரிஸ் இல்லை என்றாலும், ஐகூ நிறுவனத்திடம் பிற அட்டகாசமான மாடல்கள் உள்ளன. சமீபத்தில் 64,999 ரூபாய் விலையில் அறிமுகமான iQOO 15 (Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்) மற்றும் 50,000 ரூபாய்க்குள் அறிமுகமான iQOO 15R ஆகிய ஃபிளாக்ஷிப் மற்றும் சப்-ஃபிளாக்ஷிப் போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
மறுபுறம், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களைக் கவரும் விதமாக இன்று (மார்ச் 12) இந்தியாவில் iQOO Z11x என்ற புதிய மொபைலை ஐகூ அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய Z10x மாடலை விட சற்றே அதிக விலையில் வெளியானாலும், தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. நியோ சீரிஸ் தவிர்க்கப்படுவதால், அதற்குப் பதிலாக முற்றிலும் ஒரு புதிய சீரிஸை ஐகூ நிறுவனம் அறிமுகம் செய்யுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐகூவின் இந்த அதிரடி முடிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!


