ரூ. 30,000 பட்ஜெட்டில ஒரு புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த மாசம் அறிமுகம் ஆகும் POCO F6

30,000 ரூபாய் பட்ஜெட்டில ஒரு புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த மாசம் அறிமுகம் ஆகும் POCO F6 , போக்கோ எப்6 அம்சங்கள்,tami tech

 
30,000 ரூபாய் பட்ஜெட்டில ஒரு புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த மாசம் அறிமுகம் ஆகும் POCO F6

Poco தனது Poco F6 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இப்போது Poco F6 போன் BIS தளத்தில் உள்ளது. எனவே இந்த போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, Poco F6 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது tamil.gizbot.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்த போனின் மாடல் எண் 24069PC21G ஆகும். இப்போது ஆன்லைனில் வெளியிடப்பட்ட Poco F6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான பார்வை இங்கே.

POCO F6 specifications

போக்கோ எப்6 அம்சங்கள்: POCO F6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6.67 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். இந்த அற்புதமான போகோ ஸ்மார்ட்போனில் 2500 நிட்ஸ் உச்ச பிரகாசம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளது.

30,000 ரூபாய் பட்ஜெட்டில ஒரு புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த மாசம் அறிமுகம் ஆகும் POCO F6

குறிப்பாக, இந்த புதிய Poco F6 ஸ்மார்ட்போன் Snapdragon 8S Gen 3 சிப்செட்டுடன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் கேமிங் ஆப்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.

இதேபோல், Poco F6 ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது, அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை ஆதரிக்கிறது.

Poco F6 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

பிரமிக்க வைக்கும் Poco F6 ஸ்மார்ட்போனில் 50MP Sony IMX920 முதன்மை கேமரா + 8MP Sony IMX355 அல்ட்ரா-வைட் கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. மேலும், இந்த புதிய Poco ஸ்மார்ட்போன் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 32MP கேமரா ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும்.

30,000 ரூபாய் பட்ஜெட்டில ஒரு புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த மாசம் அறிமுகம் ஆகும் POCO F6

இது தவிர Poco F6 ஸ்மார்ட்போனில் LED ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த புதிய Poko போன் இந்தியாவில் HyperOS அடிப்படையிலான Android 14 இயங்குதள வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும். இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.

இந்த Poco ஸ்மார்ட்போனில் 5G, USB Type-C port, GPS, NFC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. குறிப்பாக, Poco F6 ஸ்மார்ட்போன் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில், இந்த Poco ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக