Aadhaar free Update.. இது தான் கடைசி சான்ஸ்.. ஆதாரில் எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்? UIDAI புது Aadhaar அறிவிப்பு, ஆதார் அப்டேட்.. இது தான் கடைசி
ஆதார் அட்டையை பயன்படுத்துவோருக்கான இறுதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை தகவல்களை இலவசமாக மாற்றுவதற்கான இறுதித் தேதிக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் ஆதார் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் இலவச புதுப்பிப்பு சேவைக்கான கடைசி தேதி ஜூன் 14, 2024 என அறிவிக்கப்பட்டுள்ளது, இது ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் ஆதார் அடையாள அட்டை தகவலை இலவசமாக மாற்ற அனுமதிக்கிறது. இந்த இறுதிக் காலக்கெடுவை நினைவுகூரும் வகையில், இதுவரை எந்த ஆதார் தகவல்களை மக்கள் இலவசமாக மாற்றலாம் என்ற விவரங்களை ஆதார் ஆணையம் மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது.
Last chance to change Aadhaar card details for free : (ஆதார் கார்டு தகவல்களை இலவசமாக மாற்றம் செய்ய லாஸ்ட் சான்ஸ்)
ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அனுமதிக்கிறது. இந்த இலவச சேவைக்கான காலக்கெடு UIDAI ஆல் பலமுறை திருத்தப்பட்டு, தற்போது அதன் இறுதிக் காலக்கெடுவை நெருங்கியுள்ளது. ஆதார் அட்டை விவரங்களை பொதுமக்கள் இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையைப் பெற்ற நபர்கள் தங்கள் அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI அறிவுறுத்துகிறது. அதேபோல், 5 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தையின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதும் மிகவும் முக்கியம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது ஆதார் அட்டைக்கு பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பால் ஆதார் அட்டையை சாதாரண ஆதார் அட்டையாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 14-ம் தேதி வரை ஆதார் அட்டையில் மாற்றங்களைச் செய்ய கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுமக்கள் இலவசமாக ஆதார் எண்ணை மாற்றிக்கொள்ளலாம் என்ற விவரங்கள் பட்டியலை ஆதார் ஆணையம் மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வெளியிட்டுள்ள தகவலின்படி, எந்தெந்த தகவல்களை இலவசமாக பரிமாறி பயன்பெறலாம் என்பதை இப்போது தெளிவாக பார்க்கலாம்.
ஆதார் அட்டை (Aadhaar free Update) தகவல்களில் எதை எல்லாம் இலவசமாக மாற்றாலம்?
1. புகைப்படம்
2. பெயர்
3. முகவரி
4. பிறந்த தேதி / வயது
5. பாலினம்
6. மொபைல் எண்
7. மின்னஞ்சல் முகவரி
8. உறவு நிலையில் மாற்றம்
9. தகவல் பகிர்வு ஒப்புதல்
10. கண் கருவிழி மற்றும் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள்
ஆதார் அட்டையில் உள்ள ஆதார் புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை மாற்ற பொதுமக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தை நேரில் பார்வையிடுவது கட்டாயமாகும். பிற ஆதார் விவரங்களை பொதுமக்கள் ஆன்லைனிலும், அருகிலுள்ள ஆதார் மையம் மூலமாகவும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என UIDAI தெரிவித்துள்ளது. ஜூன் 14, 2024 வரை மட்டுமே மக்கள் மேற்கண்ட தகவல்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியும்.
COMMENTS