20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!

20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!,oneplus,tech news,phone,technology,news,india,ஒன்பிளஸ்,தொழில்நுட்பம்செய்திகள்

20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!
20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!

OnePlus நிறுவனம் அதன் புது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் அம்சங்கள் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் BIS சான்றிதழ் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த OnePlus Nord CE 4 Lite போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. எனவே இந்த புதிய ஒன்பிளஸ் போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, இந்த OnePlus Nord CE 4 Lite போனின் புகைப்படம் X (Twitter) தளத்தில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா மற்றும் இரட்டை ஃபிளாஷ் விளக்குகள் உள்ளன. இந்த போன் பின்னர் கருப்பு நிறத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்ட சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!

20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!
20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!

OnePlus Nord CE4 Lite specifications

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் அம்சங்கள்: இந்த OnePlus Nord CE4 லைட் போன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை ரீடர் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 4 லைட் போன் இந்தியாவில் வெளியிடப்படும். ஆனால் இந்த போனில் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும். மேலும், இந்த OnePlus Nord CE 4 Lite போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

OnePlus Nord CE 4 Lite ஃபோன் சக்திவாய்ந்த Snapdragon 6 gen 1 SoC மூலம் இயக்கப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. குறிப்பாக கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த OnePlus போனில் Adreno 710 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

மேலும், இந்த OnePlus Nord CE 4 Lite போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!
20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள வர இருக்கும் OnePlus ஸ்மார்ட் போன் இதுதான்!

இந்த OnePlus Nord CE 4 Lite ஃபோனில் 50MP முதன்மை கேமரா + 2MP அல்ட்ரா வைட் கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16எம்பி கேமராவும் உள்ளது. எனவே OnePlus Nord CE 4 Lite போனில் உதவியுடன் தரமான படங்களை எடுக்கலாம்.

OnePlus Nord CE 4 Lite ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரியுடன் வருகிறது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W சார்ஜிங்) வசதி உள்ளது. குறிப்பாக விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

குறிப்பாக, OnePlus Nord CE 4 Lite போனில் 5G, USB போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய OnePlus போன் இந்தியாவில் ரூ.23,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.


Photo courtesy: Gadget Bits, X, OnePlus

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக