அடுத்து இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.? எந்த மாடல்?

அடுத்து இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.? எந்த மாடல்?,Motorola Edge 50 spotted on BIS site:check all details here

அடுத்து இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.? எந்த மாடல்?

அடுத்து இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.? எந்த மாடல்?

மோட்டோரோலா அடுத்ததாக மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது BIS சான்றிதழ் தளத்தில் XT2407-3 என்ற மாடல் எண்ணுடன் காணப்படுகிறது. எனவே இந்த வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் கசிந்த அம்சங்களை ஆன்லைனில் பாருங்கள்.

Motorola Edge 50 Specifications

மோட்டோரோலா எட்ஜ் 50 அம்சங்கள்: மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

மேலும், இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 போனில் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா, 5ஜி, ஜிபிஎஸ், புளூடூத், வைஃபை 6, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதுவரை இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த போனின் அனைத்து அம்சங்களும் விரைவில் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட Motorola Edge 40 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

Motorola Edge 40 Specifications

மோட்டோரோலா எட்ஜ் 40 அம்சங்கள்: ஃபோனில் 6.55-இன்ச் முழு HD+ 3D வளைந்த pOLED டிஸ்ப்ளே உள்ளது. டிஸ்ப்ளே 2400×1080 பிக்சல்கள், 1200 nits பீக் பிரைட்னஸ், 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 360Hz தொடு மாதிரி வீதம் ஆகியவற்றுடன் வருகிறது.

அடுத்து இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.? எந்த மாடல்?
அடுத்து இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.? எந்த மாடல்?

இந்த மோட்டோ போனில் ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம் (ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம்) சிப்செட் உள்ளது. இது Mali-G77 MC9 GPU கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது. குறிப்பாக, இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.

இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி உள்ளது. இந்த போனில் டூயல் ஹைப்ரிட் நானோ சிம் ஸ்லாட் மட்டுமே உள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 போனில் சுற்றுப்புற ஒளி சென்சார் உள்ளது.

குவாட் பிக்சல் டெக்னாலஜி + 13 எம்பி அல்ட்ரா-வைட் ஆட்டோஃபோகஸ் கேமராவுடன் 50 எம்பி பிரதான கேமராவின் இரட்டை பின்புற கேமரா உள்ளது. இந்த அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது OIS தொழில்நுட்பம் கொண்ட கேமரா மாடல். இந்த இரட்டை கேமரா எல்இடி ப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 32 எம்பி செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

அடுத்து இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.? எந்த மாடல்?
அடுத்து இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்.? எந்த மாடல்?

குறிப்பாக, மோட்டோரோலா எட்ஜ் 40 ஃபோன் USB Type-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் Dolby Atmos ஆகியவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது 3 மைக்ரோஃபோன்களுடன் வருகிறது. எனவே, ஆடியோ தரம் நன்றாக இருக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 40 ஆனது IP68 தரப்படுத்தப்பட்ட நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (வாட்டர்/டஸ்ட் ரெசிஸ்டண்ட்) மற்றும் பேட்டரி அமைப்பு அருமை. இது 68W TurboPower ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4600mAh பேட்டரியுடன் வருகிறது. இது 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக