Samsung Galaxy M35 5G அறிமுகமானது.. 50MP கேமரா, AMOLED டிஸ்பிளே..15,999 விலை.. எப்போது முதல் விற்பனை?

Samsung Galaxy M35 5G அறிமுகமானது.. 50MP கேமரா, AMOLED டிஸ்பிளே..15,999 விலை.. எப்போது முதல் விற்பனை?Samsung Galaxy M35 5G,

Samsung Galaxy M35 5G அறிமுகமானது.. 50MP கேமரா, AMOLED டிஸ்பிளே..15,999 விலை.. எப்போது முதல் விற்பனை?

சாம்சங் தனது புதிய Galaxy M35 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, AMOLED Infinity-O display, 50MP ப்ரைமரி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. இப்போது Samsung Galaxy M35 5G போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.


Samsung Galaxy M35 5G விவரக்குறிப்புகள்: இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த Octa Core Exynos 1380 (Octa Core Exynos 1380 மொபைல்) சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த போனில் Mali-G68 MP5 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்.


இந்த போன் 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவுடன் வரும். மேலும் இதன் டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000 nits உச்ச பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்கும்.

Samsung Galaxy M35 5G அறிமுகமானது.. 50MP கேமரா, AMOLED டிஸ்பிளே..15,999 விலை.. எப்போது முதல் விற்பனை?

இதேபோல், Samsung Galaxy M35 5G போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி + 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன் One UI அடிப்படையில் ஆண்ட்ராய்டு 14 கொண்டுள்ளது. ஆனால் இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும்.

Samsung Galaxy M35 5G ஸ்மார்ட்போனில் 50MP முதன்மை கேமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2MP மேக்ரோ கேமரா ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. மேலும், இந்த சாம்சங் போன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13எம்பி கேமராவுடன் வருகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.


Samsung Galaxy M35 5G ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை ஆதரிக்கிறது. மேலும், இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இந்த Samsung Galaxy M35 5G போனில் 6000mAh பேட்டரி உள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax, ப்ளூடூத் 5.3, GPS, USB Type-C port -C) உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது.

Samsung Galaxy M35 5G அறிமுகமானது.. 50MP கேமரா, AMOLED டிஸ்பிளே..15,999 விலை.. எப்போது முதல் விற்பனை?

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் மூன்லைட் ப்ளூ, டேபிரேக் ப்ளூ மற்றும் தண்டர் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது. ஜூலை 20 முதல் அமேசான் பிரைம் டே சேல் என்ற சிறப்பு விற்பனையின் போது இந்த புதிய சாம்சங் போனை வாங்கலாம்.

புதிய Samsung Galaxy M35 5G போனின் விலை ரூ.15,999. குறிப்பாக மாடல் இந்த சாம்சங் போன் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக