Vivo v40 மற்றும் vivo v40 pro ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த போன்கள் அற்புதமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்றன. இப்போது இந்த புதிய போன்களின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
vivo V40 specifications
விவோ வி40 அம்சங்கள்: ஃபோன் 6.78 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இதன் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த போன் Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட் மற்றும் Adreno 720 GPU கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது. மேலும், இந்த போனில் Funtouch OS 14 அடிப்படையில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளது. மேலும், இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்) உள்ளது.
ஸ்மார்ட்போன் ZEISS ஆப்டிக்ஸ் சென்சார் உடன் வருகிறது. அதன்படி, இந்த போனில் 50MP ISOCELL GNJ கேமரா + 50MP அல்ட்ரா வைட் கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. 50எம்பி ஆட்டோ ஃபோகஸ் செல்ஃபி கேமராவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமராவில் 4K வீடியோ பதிவு செய்ய முடியும்.
இந்த பிரமிக்க வைக்கும் Vivo V40 ஃபோன் USB Type-C ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் ஆதரிக்கிறது. மேலும், இந்த போன் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் உடன் வருகிறது.
5000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 5G SAFSA, டூயல் 4G VoltE, Wi-Fi 6 802.11pe, ப்ளூடூத் 5.4, GPS, GLONASS, GALILEO, USB Type-C 2.0 ஆகியவை இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 190 கிராம்.
vivo V40 Pro specifications
விவோ வி40 ப்ரோ அம்சங்கள்: இந்த ஃபோன் 6.78 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இதன் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த போன் ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் சிப்செட் மற்றும் இம்மார்டலிஸ்-ஜி715 ஜிபியு கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது. மேலும், இந்த போனில் Funtouch OS 14 அடிப்படையில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளது. மேலும், இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.
இந்த ஃபோனில் 50MP Sony IMX921 சென்சார் + 50MP அல்ட்ரா வைட் கேமரா + 50MP AF சோனி IMX816 2x டெலிஃபோட்டோ கேமராவின் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. 50எம்பி ஆட்டோ ஃபோகஸ் செல்ஃபி கேமராவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமராவில் 4K வீடியோ பதிவு செய்ய முடியும்.
இந்த பிரமிக்க வைக்கும் (Vivo V40 Pro) ஃபோன் USB Type-C ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் ஆதரிக்கிறது. மேலும், இந்த போன் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் உடன் வருகிறது.
5000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 5G SA/NSA, dual 4G VoltE, Wi-Fi 6 802.11PE, Bluetooth 5.4, GPS, GLONASS, GALILEO, USB Type-C 2.0 போன்றவை இந்த போனின் சிறந்த அம்சங்களாகும். மேலும் இந்த போனின் எடை 190 கிராம்.
விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி40 போன் ரூ.34,999. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 36,999 மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.41,999 ஆகும். இந்த போன் டைட்டானியம் கிரே, லோட்டஸ் பர்பில் மற்றும் கங்கேஸ் ப்ளூ நிறங்களில் கிடைக்கும்.
Vivo V40 Pro ஸ்மார்ட்போனின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ.49,999. 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.59,999. இந்த போன் டைட்டானியம் கிரே மற்றும் கங்கை நீல வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த போன்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இந்த போன்கள் ஆகஸ்ட் 13 முதல் Vivo.com மற்றும் Flipkart இல் விற்பனைக்கு வரும்.

