செஞ்சுட்டீங்க.! 24ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது OnePlus போன் எல்லாமே சூப்பர்.! எந்த மாடல்?

செஞ்சுட்டீங்க.! 24ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது OnePlus போன் எல்லாமே சூப்பர்.! எந்த மாடல்?,Sony LYT-808 camera sensor,OnePlus 13

செஞ்சுட்டீங்க.!  24ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது OnePlus போன் எல்லாமே சூப்பர்.! எந்த மாடல்?

OnePlus நிறுவனம் OnePlus 13 ஸ்மார்ட்போனை அடுத்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிலையில், OnePlus 13 போனின் ரேம் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

OnePlus 13 Specifications

ஒன்பிளஸ் 13 அம்சங்கள்: இந்த புதிய OnePlus 13 ஸ்மார்ட்போன் 24GB RAM உடன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 1TB வரை சேமிப்பு வசதி வழங்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் (வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை) தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus 13 போன் (Qualcomm Snapdragon 8 Gen 4 சிப்செட்- உடன் அறிமுகமாகும். குறிப்பாக, இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய போன் (Android 14) ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் வெளிவரும். இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும் என்று கூறப்படுகிறது.

செஞ்சுட்டீங்க.!  24ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது OnePlus போன் எல்லாமே சூப்பர்.! எந்த மாடல்?

Sony LYT-808 camera sensor

இந்த புதிய OnePlus போன் 50MP Sony LYT-808 கேமரா சென்சார்  + 50MP டெலிஃபோட்டோ சென்சார் + 50MP அல்ட்ரா வைட் லென்ஸின் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமராவுடன் இந்த போன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய OnePlus 13 போன் 6.8 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். இந்த டிஸ்ப்ளே 1440x3168 பிக்சல்கள், வளைந்த விளிம்புகள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போன் ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும்.

புதிய OnePlus 13 ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 மதிப்பீட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனரும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செஞ்சுட்டீங்க.!  24ஜிபி ரேம்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது OnePlus போன் எல்லாமே சூப்பர்.! எந்த மாடல்?

OnePlus 13 ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியுடன் வரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பேட்டரியை சார்ஜ் செய்ய 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்யலாம்.

OnePlus 13 ஸ்மார்ட்போனில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே நீங்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறுவீர்கள். 5ஜி, வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன. குறிப்பாக, (OnePlus 13) ஸ்மார்ட்போன் ரூ.65,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த போன் விலைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.


photo credit: OnePlusClub, androidheadlines.com

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக