Samsung Galaxy M55s 5G Specifications
சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி அம்சங்கள்: Samsung Galaxy M55s ஃபோன் 6.67 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். இந்த போனின் டிஸ்ப்ளே 1080 X 2400 பிக்சல்கள், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000 nits பீக் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 23: 50எம்பி OIS கேமராவுடன் களமிறங்கும் Samsung Galaxy M55s 5G.!
Samsung Galaxy M55S 5G ஸ்மார்ட்போனில் 50MP முதன்மை கேமரா + 8MP அல்ட்ரா-வைட் கேமரா + 2MP மேக்ரோ கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தரமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50எம்பி கேமரா உள்ளது. இது தவிர Samsung Galaxy M55S 5G போனில் LED ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமராக்கள் மற்றும் வடிவமைப்பில் சாம்சங் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த போன் கோரல் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் வண்ணங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Samsung Galaxy M55S 5G ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
புதிய Samsung Galaxy M55S 5G ஸ்மார்ட்போனில் 5G, 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.2, NFC, USB Type-C port, GPS உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. குறிப்பாக, இந்த புதிய சாம்சங் போன் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் இந்த Samsung Galaxy M55S 5G போன் ரூ.20,000க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
