Infinix Hot 50 5G ஃபோன் Flipkart இன் சிறப்பு விற்பனையில் 23 சதவீத தள்ளுபடியுடன் ரூ.9,999 விலையில் கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உண்டு. எனவே இந்த போனை ரூ.8749 விலையில் வாங்கலாம்.
Infinix Hot 50 5G Specifications
இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அம்சங்கள்: ஃபோன் 6.7 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 1600 x 720 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்ப்ளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
Infinix Hot 50 5G ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6nm சிப்செட்டுடன் வருகிறது. XOS 14.5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 இலும் இந்த போன் இயங்குகிறது. ஆனால் இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும்.
போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. மேலும், புதிய Infinix போனில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் உள்ளது. Infinix Hot 50 5G ஃபோன் ஸ்லீக் பிளாக், ட்ரீமி பர்பில், சேஜ் கிரீன் மற்றும் வைப்ரண்ட் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது.
இந்த Infinix Hot 50 5G மாடல் 4GB RAM + 128GB மெமரி கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த புதிய Infinix ஃபோன் மெமரி விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இருப்பதால் 1டிபி வரை மெமரி கார்டைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Infinix Hot 50 5G ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பேட்டரியை சார்ஜ் செய்ய 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் (fast charging) செய்ய முடியும்.
குறிப்பாக 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac, GPS, USB Type-C, Bluetooth புதிய போனில் 5.3 (Bluetooth 5.3) உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது மற்றும் Infinix Hot 50 5G போனின் எடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 188 கிராம் இருக்கும்.