விரைவில் அறிமுகமாகும் Vivo X200 Pro mini போன்.. கம்மி விலையில் இத்தனை அம்சங்களா?

விரைவில் அறிமுகமாகும் Vivo X200 Pro mini போன்.. கம்மி விலையில் இத்தனை அம்சங்களா?,விவோ எக்ஸ்200 ப்ரோ மினி அம்சங்கள்,Vivo X200 Pro mini Specifications

விரைவில் அறிமுகமாகும் Vivo X200 Pro mini போன்.. கம்மி விலையில் இத்தனை அம்சங்களா?

Vivo விரைவில் Vivo X200 Pro மினியை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு அனைத்து நாடுகளிலும் போன் அறிமுகப்படுத்தப்படும். இந்நிலையில் Vivo X200 Pro மினி போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன.

அதன்படி, Vivo X200 Pro Mini மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த புதிய Vivo ஃபோன் குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

Vivo X200 Pro mini Specifications

விவோ எக்ஸ்200 ப்ரோ மினி அம்சங்கள்: புதிய Vivo X200 Pro மினி போன் 6.3 இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். இது 1,440 x 3,200 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
விரைவில் அறிமுகமாகும் Vivo X200 Pro mini போன்.. கம்மி விலையில் இத்தனை அம்சங்களா?

இந்த புதிய Vivo போன் சக்திவாய்ந்த MediaTek Dimensity 9400 chipset (Dimensity 9400 chipset) உடன் வெளியிடப்படும். குறிப்பாக இந்த போனில் கேமிங் ஆப்ஸ் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்,  உள்ளிட்ட பல்வேறு Apps வசதிகளை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த டைமென்சிட்டி சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது.

Vivo X200 Pro Mini ஸ்மார்ட்போன் 50MP Sony LYT-818 மெயின் சென்சார் + 50MP அல்ட்ரா வைட் கேமரா + 200MP டெலிஃபோட்டோ கேமராவின் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வெளியிடப்படும். அகவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான வீடியோ, படங்கள், எடுக்க முடியும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50எம்பி கேமராவும் உள்ளது. இது தவிர எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வரும்.

இந்த புதிய விவோ போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்துடன் வரும். இதேபோல், Vivo X200 Pro Mini ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவுடன் வெளியிடப்படும். மேலும், இந்த போனின் ஆடியோ பகுதியில் Vivo அதிக கவனம் செலுத்தியுள்ளது.

விரைவில் அறிமுகமாகும் Vivo X200 Pro mini போன்.. கம்மி விலையில் இத்தனை அம்சங்களா?

Vivo X200 Pro Mini ஆனது 5500mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என வதந்தி பரவியுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo X200 Pro Mini ஸ்மார்ட்போன் OriginOS 5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் வருகிறது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும் என்று கூறப்படுகிறது. பின்னர் இந்த Vivo ஸ்மார்ட்போனில் 5G, Wi-Fi, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது.

குறிப்பாக Vivo X200 Pro Mini சற்று அதிக விலையில் அறிமுகம் செய்யப்படும். ஆனால் அனைத்து அம்சங்களும் விலைக்கு மதிப்புள்ளது. குறிப்பாக அனைத்து நாடுகளிலும் இந்த புதிய Vivo போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Photo credit: weibo.com, gizmochina, moneycontrol


About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக