10 நாள் மட்டும் காத்திருங்கள்.. Infinix Zero Flip போன் அறிமுகம்: வேறலெவல் அம்சங்கள்.! என்ன விலை?

10 நாள் மட்டும் காத்திருங்கள்.. Infinix Zero Flip போன் அறிமுகம்: வேறலெவல் அம்சங்கள்.! என்ன விலை?,Infinix Zero Flip Specifications

10 நாள் மட்டும் காத்திருங்கள்.. Infinix Zero Flip போன் அறிமுகம்: வேறலெவல் அம்சங்கள்.!  என்ன விலை?
Infinix ஆனது அதன் புதிய Infinix Zero Flip போனை கடந்த வாரம் உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த புது போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Infinix Zero flip போன் இந்தியாவில் அக்டோபர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

Infinix Zero Flip Specifications

இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் அம்சங்கள்: 6.9-இன்ச் மடிக்கக்கூடிய LTPO AMOLED FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த பிரதான டிஸ்ப்ளே 1080 x 2640 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1400 நிட்ஸ் பீக் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது வெளிப்புற டிஸ்ப்ளே எனப்படும் 2வது டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த 3.64-இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1056 x 1066 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1100 நிட்ஸ் பீக் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிறிய காட்சி பயன்படுத்த மிகவும் அருமையாக உள்ளது.

10 நாள் மட்டும் காத்திருங்கள்.. Infinix Zero Flip போன் அறிமுகம்: வேறலெவல் அம்சங்கள்.!  என்ன விலை?

Infinix Zero Flip ஆனது OIS ஆதரவுடன் 50MP Samsung GN5 பிரதான சென்சார் + 50MP அல்ட்ரா வைட் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50MP Samsung JN1 சென்சார் இந்த போனில் உள்ளது.

இது தவிர, Infinix Zero flip போனில் 4K வீடியோ ரெக்கார்டிங், DV மோட், GoPro மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Infinix Zero ஃபிளிப் போன் MediaTek Dimensity 8020 சிப்செட்டுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். மேலும், இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் அறிமுகமாகும். இருப்பினும், இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் உள்ளன.

10 நாள் மட்டும் காத்திருங்கள்.. Infinix Zero Flip போன் அறிமுகம்: வேறலெவல் அம்சங்கள்.!  என்ன விலை?

இந்த Infinix Zero flip போனில் 8GB RAM (8GB virtual RAM) + 512GB மெமரி உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ஜேபிஎல் ஆதரவுடன் கூடிய இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த போனில் கொண்டுள்ளது.

Infinix Zero flip போனில் Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. இந்த போன் 4720mAh பேட்டரி மற்றும் 70W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இந்தியாவிற்கு வரும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும்.

ராக் பிளாக் மற்றும் ப்ளாசம் க்ளோ வண்ணங்களில் இந்த போன் இந்தியாவில் வெளியிடப்படும். ஆன்லைன் கசிவின் படி, இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் போன் ரூ.54,199 விலையில் வெளியிடப்படும். குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக