ஜியோ இப்போது கூட ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (VI) உடன் போட்டியிட சில அற்புதமான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் அவ்வப்போது சில அற்புதமான சலுகைகளையும் வழங்குகிறது. ஜியோ பட்ஜெட் விலையில் 90 நாட்கள் மற்றும் 98 நாட்கள் செல்லுபடியாகும் இரண்டு அற்புதமான ப்ரீபெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது.
அதாவது ஜியோ ரூ.899 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டங்கள் அதிக பலன்களை அளிப்பவை. மேலும், இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால், மூன்று மாதங்களுக்கு எந்த கவலையும் இருக்காது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 20ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. எனவே ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் கிடைக்கும். இது தவிர பல்வேறு அற்புதமான பலன்களை இத்திட்டத்தின் மூலம் பெற முடியும்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தின்படி, ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்கும். இந்த திட்டம் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு பிறகு தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64kbps ஆக குறைக்கப்படும்.
ஜியோ ரூ 999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். அதன்பின் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வழங்கப்படும்.
இது தவிர, ஜியோவின் இந்த அற்புதமான ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 100 SMS, JioTV, JioCinema, JioCloud போன்ற பலன்களை வழங்குகிறது. இந்த திட்டம் குறிப்பாக வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64kbps ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக இந்த ஜியோ ரூ 899 மற்றும் ரூ 999 ப்ரீபெய்ட் திட்டங்கள் மூன்று மாத வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா மற்றும் வரம்பற்ற சலுகைகளை வழங்குவதால், நீங்கள் நம்பிக்கையுடன் ரீசார்ஜ் செய்யலாம். ஜியோ விரைவில் பல அற்புதமான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.