Samsung Galaxy A36 Specifications
சாம்சங் கேலக்ஸி ஏ36 அம்சங்கள்: இந்த Samsung Galaxy A36 ஃபோன் மற்ற சாம்சங் போன்களுடன் ஒப்பிடும்போது தனித்துவமான கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 12எம்பி செல்பீ கேமரா உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செல்ஃபி கேமரா மூலம் அற்புதமான படங்களை எடுக்க முடியும்.
Samsung Galaxy A36 போன் சக்திவாய்ந்த (Qualcomm Snapdragon 7s Gen 2) சிப்செட்டுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் அதிக வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. மேலும் இந்த போன் Adreno கிராபிக்ஸ் கார்டுடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் யூசர்களுக்கு இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்.
Samsung Galaxy A36 ஆனது 6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 128GB சேமிப்பு வகைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இந்த ஃபோன் ஆதரிக்கிறது.
இந்த Samsung Galaxy A36 போன் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் அறிமுகமாகும். இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களைப் பெறும். இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போன் Super AMOLED Plus டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இந்த போனில் 5G, 4G Volte, Wi-Fi, GPS உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் அனைத்து சிறந்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளியிடப்படும் என்று வதந்தி பரவியுள்ளது.
photo credit: @ONLEAKS x @GIZNEXT

