Lava Bold 5G Amazon Price
எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி இந்த உடனடி தள்ளுபடியைப் பெறலாம். எனவே, 8 ஜிபி ரேம் வேரியண்டை ரூ. 12,998 பட்ஜெட்டுக்கும், 6 ஜிபி ரேம் வேரியண்டை ரூ. 12,499 பட்ஜெட்டுக்கும் ஆர்டர் செய்யலாம். ரூ. 12,700 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன.
Lava Bold 5G Specifications
லாவா போல்டு 5ஜி அம்சங்கள்: இந்த லாவா, ஆண்ட்ராய்டு 14 OS உடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6nm சிப்செட்டுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 15 OS அப்டேட் மற்றும் 2 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.
இந்த சிப்செட்டிற்கு ஏற்ப செயல்திறனை வழங்க மாலி G57 GPU கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 6.67-இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கிடைக்கிறது. இந்த 3D வளைந்த டிஸ்ப்ளே பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கொண்டுள்ளது. மேலும், இது 16.7 மில்லியன் வண்ண ஆழத்தைக் கொண்டுள்ளது.
64 MP பிரதான கேமரா + 2 MP இரண்டாம் நிலை கேமராவுடன் இரட்டை பின்புற அமைப்பு உள்ளது. இந்த பிரதான கேமராவில் பிரீமியம் வெளியீட்டை வழங்க சோனி சென்சார் உள்ளது. இதேபோல், 16 MP செல்ஃபி ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. HD வீடியோ பதிவு தவிர, இரட்டை வியூ வீடியோ, அல்ட்ரா HD (UHD) அம்சங்கள் உள்ளன.
இந்த Lava Bold 5G ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை 110 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இது 480 மணிநேர காத்திருப்பு நேரத்தையும் 610 நிமிட YouTube பிளேபேக்கையும் வழங்குகிறது. இது (IP64 rating) P64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது.
இந்த டிஸ்ப்ளேவுடன் இணைந்து இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கிடைக்கிறது. இது AGC கிளாஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இது 5G SA மற்றும் NSA ஐ ஆதரிக்கும் MediaTek Dimensity 6300 6nm சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது இரட்டை 4G VoLTE ஐயும் கொண்டுள்ளது.
Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 5.1 மற்றும் GPS இணைப்பும் கிடைக்கிறது. இது USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டைக் கொண்டுள்ளது. Lava Bold 5G ஸ்மார்ட்போன் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது, Sapphire Blue, இது அதற்கு அல்ட்ரா-பிரீமியம் ஸ்மார்ட்போன் தோற்றத்தை அளிக்கிறது.