Motorola கஸ்டமர்கள் குஷிதான்: Android 16 update பெறும் போன்கள்.. இதோ லிஸ்ட்.!,, ஆண்ட்ராய்டு 16 அப்டேட் சில போன்களுக்கு மட்டுமே
Android 16 update
அதாவது, கடந்த ஜூன் மாதம் சில போன்களுக்கு மட்டுமே பீட்டா பதிப்பு நிரலைத் தொடங்கியது. ஆனால் இப்போது மோட்டோரோலா பல புதிய அம்சங்கள் மற்றும் பல மேம்பாடுகளுடன் ஆண்ட்ராய்டு 16 இன் நிலையான பதிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது.
மோட்டோரோலா ஒன்பிளஸ், விவோ, நத்திங் மற்றும் சியோமி போன்ற பெரிய பிராண்டுகளுக்கு முன்பே ஆண்ட்ராய்டு 16 இன் நிலையான அப்டேட் வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட எட்ஜ் 60 ப்ரோ, ஆண்ட்ராய்டு 16 இன் நிலையான பதிப்பைப் பெற்ற முதல் மோட்டோரோலா சாதனமாகும். அதன் பிறகு, புதுப்பிப்பு மெதுவாக மற்ற எட்ஜ் மாடல்கள் மற்றும் ஜி-சீரிஸ் போன்களுக்கும் விரிவடைந்துள்ளது.
சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். அதாவது, தற்போது ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறும் மோட்டோரோலா போன்களின் பட்டியலை gizmochina வலைத்தளம் வெளியிட்டுள்ளது. இப்போது அதைப் பார்ப்போம்.
Android 16 update: ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை பெறும் மோட்டோரோலா போன்கள்:
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro)
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion)
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion)
மோட்டோரோலா மோட்டோ ஜி 2025 (Motorola Moto G 2025)
தற்போது, ஆண்ட்ராய்டு 16 அப்டேட் சில போன்களுக்கு மட்டுமே கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த புதிய அப்டேட் வரும் வாரங்களில் இன்னும் பல மோட்டோரோலா போன்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டைப் பெற்ற மோட்டோரோலா போன்களில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மோட்டோரோலா நேற்று அறிமுகப்படுத்திய மோட்டோரோலா ஜி06 பவரின் அம்சங்கள் மற்றும் விலையைப் பாருங்கள்.
மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 1640 × 720 பிக்சல்கள், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் 50MP பின்புற கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8MP கேமராவும் உள்ளது. இந்த தொலைபேசியில் IP64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு, 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், இந்த தொலைபேசியில் 18W வேகமான சார்ஜிங், இரட்டை 4G VoLTE, புளூடூத் 6.0, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி, சைடு-மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த தொலைபேசியின் விலை ரூ.7499.
COMMENTS