OnePlus 13R Price Drop India
தற்போது, அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் இந்தியா இணையதளத்தில், ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போனின் 12GB ரேம் மற்றும் 256GB சேமிப்பக விருப்பத்திற்கு ரூ. 1000 விலை குறைப்புடன், கூடுதலாக ரூ. 2000 உடனடித் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையின் கீழ், ரூ. 42,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 13R மாடலின் விலையை குறைந்தபட்சம் ரூ. 41,999 ஆகவும், அதிகபட்சம் ரூ. 39,999 ஆகவும் குறைக்க முடியும்.
அமேசான் இந்தியாவும் ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போனை அதன் அசல் அறிமுக விலையான ரூ. 42,999-லிருந்து ரூ. 1000 தள்ளுபடி செய்து, ரூ. 41,999 என்ற விலையில் விற்பனை செய்கிறது. இருப்பினும், ஃபிளிப்கார்ட் நேரடியாக ரூ. 4,559 விலை குறைப்பை வழங்கி, ஒன்பிளஸ் 13R மாடலை ரூ. 42,999-க்கு பதிலாக ரூ. 38,440-க்கு விற்பனை செய்கிறது.
OnePlus 15R Price in India
புதிய ஒன்பிளஸ் 15ஆர் விலை விவரங்கள்: OnePlus 15R ஸ்மார்ட்போனின் அடிப்படை 12GB ரேம் + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் அசல் விலை ரூ. 47,999 ஆகவும், உயர்நிலை 12GB ரேம் + 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 52,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுகச் சலுகையின் கீழ், ஆக்சிஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி அட்டைகளுக்கு முறையே ரூ. 3000 மற்றும் ரூ. 5000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அடிப்படை 12GB ரேம் + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்தின் விலையை ரூ. 44,999 ஆகவும், உயர்நிலை 12GB ரேம் + 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்தின் விலையை ரூ. 47,999 ஆகவும் குறைக்க முடியும்.
OnePlus 15R vs 13R Comparison
OnePlus 15R ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் மின்ட் கிரீன் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும். இதற்கிடையில், OnePlus 15R ஏஸ் எடிஷன் எலக்ட்ரிக் வயலட் வண்ணத்தில் கிடைக்கும். முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, OnePlus 15R ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
New OnePlus 13R Price Drop India?
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை, இது 6.78-இன்ச் ஃபுல்-எச்டி+ LTPO டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 1264 x 2780 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 93.9% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 450 PPI பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்,, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 7 protection) ஆகியவை அடங்கும்.
சிப்செட்டைப் பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது 16GB வரை ரேம் மற்றும் 512GB வரை உள்ளக சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரை, இது OIS ஆதரவுடன் கூடிய 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் முதன்மை சென்சார் கொண்ட டிரிபிள் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
மீதமுள்ள கேமராக்களில் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இறுதியாக, இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் : OnePlus 15R முக்கிய அம்சங்கள்:
- 165Hz ரெஃப்ரெஷ் ரேட்வுடன் 6.83-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- இரண்டு பின்புற கேமரா அமைப்பு
- OIS ஆதரவுடன் 50MP முதன்மை சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா
- ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்ஃபி கேமரா
- 7400mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 OS அடிப்படையிலான OxygenOS 16
- IP66, IP68, IP69 மற்றும் IP69K மதிப்பீடு
Best 5G Smartphone Offers India,