தற்போது, ரியல்மி 15X 5G போன் ஃபிளிப்கார்ட்டில் 5 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுக்கு ரூ. 1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே, இதை ரூ. 16,499 விலையில் வாங்கலாம். இந்த விலையில், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை வாங்க முடியும்.
Realme 15X 5G Specification
ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்கள்: ரியல்மி 15X 5G போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6nm சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-இல் இயங்குகிறது மற்றும் 2 தலைமுறை ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் வருகிறது.
இதில் ஆர்ம் மாலி G57 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ரியல்மி 15X 5G ஸ்மார்ட்போன் ரியல்மி UI 6.0 உடன் வருகிறது. கேமிங் மற்றும் OTT உள்ளடக்கங்களில் உயர்தர வெளியீட்டிற்காக இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட், கொண்டுள்ளது. இது 6.8-இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.
இந்த ரியல்மி போன் HD+ ரெசல்யூஷன் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட்டை, கொண்டுள்ளது. இது 1200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ்,கொண்டுள்ளது. இந்த விலையில் இது ஒரு உயர் ரெஃப்ரெஷ் ரேட், டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் சோனி IMX852 சென்சார் கொண்ட ஒரு இரண்டாம் நிலை கேமரா உள்ளது.
மேலும், செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இது 50 எம்பி செல்ஃபி கேமராவை வழங்குகிறது. ரியல்மி 15X 5G ஸ்மார்ட்போன் அதன் செல்ஃபி கேமராவிற்கு OmniVision OV50D40 சென்சாரைப் பயன்படுத்துகிறது. இதன் நீர் எதிர்ப்புத் தன்மை காரணமாக, இது நீருக்கடியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடுப்பதையும் அனுமதிக்கிறது.
✨ Realme Narzo 90x 5G Top Highlights:
- 🔋 Battery: 7,000mAh Titan Battery (2 Days Battery Life!)
- ⚡ Charging: 60W SuperVOOC Fast Charging
- 📱 Display: 6.72" 144Hz Ultra Smooth Display
- 🚀 Processor: MediaTek Dimensity 6300 5G Chipset
- 📸 Camera: 50MP AI Camera
- 💾 Storage: Up to 8GB RAM + 128GB Storage
💰 Price & Offers:
- Launch Price: ₹13,999/-
- Bank Offer Price: ₹11,999/- (Cards Offer)
- Sale Date: Starts on 23rd Dec @ Amazon
எனவே, இந்த ரியல்மி 15X 5G ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் மற்றும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. இது இராணுவத் தர நீடித்துழைப்பிற்கான MIL-STD 810H சான்றிதழையும் கொண்டுள்ளது. ரியல்மி 15X 5G ஆனது 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரியுடன் வருகிறது.
இதில் (Side Mounted Fingerprint Sensor) சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் கீழ் பகுதியில் ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும். இது அக்வா ப்ளூ, மெரைன் ப்ளூ மற்றும் மெரூன் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் AI லேண்ட்ஸ்கேப், AI எரேசர் 2.0 மற்றும் AI மோஷன் டிப்ளர் போன்ற அம்சங்கள் உள்ளன.
மேலும், இதில் AI க்ளேர் ரிமூவர், AI அல்ட்ரா கிளாரிட்டி 2.0, AI பூஸ்ட் மற்றும் மினி கேப்சூல் போன்ற அம்சங்களும் அடங்கும். இந்த மாடலில் 5G SA/NSA, டூயல் 4G VoLTE, புளூடூத் 5.3 மற்றும் GPS இணைப்பு வசதிகள் உள்ளன.