சாம்சங் எடுத்த அதிரடி முடிவு! Galaxy S26 Edge ரத்து? "ஸ்லிம்" டிசைன் இனி வேண்டாம்!

Samsung Galaxy S26 Edge ரத்து! S25 Edge தோல்வியால் ஸ்லிம் போன் திட்டம் கைவிடப்பட்டது. காரணம் என்ன? முழு விபரம் உள்ளே.

Samsung Galaxy S26 Edge launch cancelled due to S25 Edge failure and ultra slim phone issues explained in Tamil, சாம்சங் எடுத்த அதிரடி முடிவு! Galaxy S26 Edge ரத்து? "ஸ்லிம்" டிசைன் இனி வேண்டாம்!

Galaxy S26 Edge: ஸ்மார்ட்போன் உலகில் "மெலிதான போன்" (Ultra Slim Phone) என்ற மோகம் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்திய Galaxy S25 Edge தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு வரவிருந்த Galaxy S26 Edge திட்டத்தையே நிறுவனம் கைவிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிவனேனு நல்ல போன்களை விற்றுக்கொண்டிருந்த சாம்சங், ஏன் இந்தத் திடீர் முடிவை எடுத்தது? "ஸ்லிம்" போன்களுக்கு ஏன் இந்த நிலைமை? முழுமையாகப் பார்ப்போம்.

Galaxy S25 Edge: எங்கே சறுக்கியது?

சாம்சங் தனது Galaxy S25 சீரிஸில் "S25 Edge" என்ற பெயரில் ஒரு அல்ட்ரா ஸ்லிம் மாடலை அறிமுகப்படுத்தியது. பார்ப்பதற்கு மிக அழகாக, ஸ்லிம்மாக இருந்தாலும், இது வாடிக்கையாளர் மத்தியில் எடுபடவில்லை.

இதற்கு 3 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன:

  • மோசமான பேட்டரி: வெறும் டிசைனுக்காக பேட்டரியை 3,900mAh ஆகக் குறைத்தது சாம்சங். இன்றைய காலத்தில் இது ஒரு நாளுக்குக் கூட சார்ஜ் நிற்காது.
  • கேமரா சமரசம்: போனை மெலிதாக மாற்ற வேண்டும் என்பதற்காக, முக்கியமான Telephoto Camera-வை இதில் நீக்கினார்கள்.
  • விலை அதிகம்: "வொர்த் இல்லாத" ஒரு போனுக்கு அதிக விலை கொடுத்ததை மக்கள் விரும்பவில்லை.

ஆப்பிளுக்கும் இதே நிலைமைதான்!

சாம்சங் மட்டுல்ல, ஆப்பிள் நிறுவனமும் "iPhone Air" (Slim Model) மூலம் இதே அடியை வாங்கியது.

  • 2025-ல் அறிமுகமான ஐபோன் ஏர் மாடலுக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
  • மக்கள் "மெலிதான போனை" விட "நீண்ட நேரம் பேட்டரி வரும் போனை" தான் விரும்புகிறார்கள் என்பது ஆப்பிளுக்கும் புரிந்துவிட்டது.
  • இதனால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் ஏர் உற்பத்தியை 1 மில்லியன் யூனிட்டுகள் வரை குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Samsung Galaxy S26 Edge launch cancelled due to S25 Edge failure and ultra slim phone issues explained in Tamil, சாம்சங் எடுத்த அதிரடி முடிவு! Galaxy S26 Edge ரத்து? "ஸ்லிம்" டிசைன் இனி வேண்டாம்!

🚫 Galaxy S26 Edge ரத்து?

கொரியா எகனாமிக் டெய்லி (Korea Economic Daily) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சாம்சங் நிறுவனம் Galaxy S26 Edge மாடலை உருவாக்கும் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

2026-ம் ஆண்டு, சாம்சங் மீண்டும் தனது பழைய பாணியான "சமச்சீரான ஹார்டுவேர்" (Balanced Hardware) பக்கம் திரும்புகிறது. அதாவது, டிசைனை விட Performance மற்றும் Battery-க்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும்.

சீன நிறுவனங்களிடம் பாடம் கற்குமா சாம்சங்?

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சீன நிறுவனங்கள் (Vivo, Honor, Xiaomi) மெலிதான போன்களிலேயே 6000mAh பேட்டரியை கொடுக்கின்றன.

  • அவர்கள் Silicon-Carbon Battery என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
  • ஆனால், சாம்சங் இன்னும் பழைய லித்தியம் பேட்டரியையே நம்பி இருப்பதால், போனை ஸ்லிம் ஆக்கினால் பேட்டரியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சீன நிறுவனங்களைப் பார்த்து சாம்சங் எப்போது பாடம் கற்கப் போகிறதோ, அப்போதுதான் உண்மையான "ஸ்லிம் ஃபிளாக்ஷிப்" சாத்தியமாகும்!

கருத்துரையிடுக