"சார் லோன் வேணுமா?", "கிரெடிட் கார்டு ஆஃபர் இருக்கு சார்!" - இந்த வார்த்தைகளைக் கேட்டாலே பலருக்கு ரத்தம் கொதிக்கும். முக்கியமான மீட்டிங்கில் இருப்போம், அல்லது தூங்கிக் கொண்டிருப்போம்... அந்த நேரம் பார்த்து இந்த ஸ்பேம் கால்கள் (Spam Calls) வரும்.
ட்ருகாலர் (Truecaller) ஆப் போட்டாலும் சில சமயம் இது நிற்பதில்லை. ஆனால், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான DND (Do Not Disturb) சேவையை ஆக்டிவேட் செய்வதன் மூலம், இந்தத் தொல்லையை 100% ஒழிக்க முடியும். அது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
வழிமுறை 1: ஒரே ஒரு SMS போதும்! (Universal Method)
நீங்கள் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) அல்லது பிஎஸ்என்எல் (BSNL) என எந்த சிம் வைத்திருந்தாலும், இந்த ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும். இது TRAI (Telecom Regulatory Authority of India) வழங்கிய வசதி.
- உங்கள் மொபைலில் Message App-ஐ ஓபன் செய்யவும்.
- 1909 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
- மெசேஜில் START 0 (கேப்பிட்டல் எழுத்தில், இடைவெளி விட்டு) டைப் செய்து அனுப்பவும்.
Format: START 0 sent to 1909
- சிறிது நேரத்தில், "உங்கள் நம்பரில் DND சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டது" என மெசேஜ் வரும்.
- அடுத்த 24 மணி நேரத்தில் தேவையில்லாத மார்க்கெட்டிங் கால்கள் வருவது நின்றுவிடும்.
வாட்ஸ்அப்பில் போட்டோ மங்கலாகப் போகிறதா? வாட்ஸ்அப்பில் HD போட்டோ அனுப்புவது எப்படி? ரகசிய செட்டிங்!
வழிமுறை 2: கூகுள் டயலரில் உள்ள செட்டிங் (Android Setting)
ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள், தேவையற்ற அழைப்புகளைத் தானாகவே பிளாக் செய்ய இந்த வசதியை ஆன் செய்யலாம்.
- உங்கள் போனில் Call / Phone App-ஐ ஓபன் செய்யவும்.
- மேலே உள்ள மூன்று புள்ளிகளை (Menu) கிளிக் செய்து Settings செல்லவும்.
- அதில் "Caller ID and Spam" என்ற ஆப்ஷன் இருக்கும்.
- அதில் "Filter Spam Calls" என்பதை ON செய்துவிடவும்.
- இதைச் செய்துவிட்டால், சந்தேகம் வரும்படியான நம்பர்களை கூகுளே பிளாக் செய்துவிடும். போன் ரிங் ஆகாது.
வழிமுறை 3: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆப் வழியாக
மெசேஜ் அனுப்பத் தெரியாதவர்கள், ஆப் மூலமாகவும் இதைச் செய்யலாம்.
- Jio Users: MyJio App > Menu > Settings > Do Not Disturb > Full DND என்பதைத் தேர்வு செய்யவும்.
- Airtel Users: Airtel Thanks App > Help & Settings > DND > Block All என்பதைத் தேர்வு செய்யவும்.
முக்கிய குறிப்பு (Note)
DND சேவையை ஆக்டிவேட் செய்தாலும், வங்கி சார்ந்த ஓடிபி (OTP), சிலிண்டர் புக்கிங், மற்றும் ஆன்லைன் ஆர்டர் டெலிவரி கால்கள் வழக்கம் போல வரும். மார்க்கெட்டிங் கால்கள் மட்டுமே தடுக்கப்படும். எனவே பயப்படாமல் ஆக்டிவேட் செய்யலாம்!
