போலீஸ் ஸ்டேஷன் போகாமலேயே தொலைந்த போனை கண்டுபிடிக்கலாம்! மத்திய அரசின் சூப்பர் வசதி!

உங்கள் மொபைல் தொலைந்துவிட்டதா? மத்திய அரசின் CEIR Portal மூலம் IMEI நம்பரை வைத்து போனை கண்டுபிடிப்பது மற்றும் பிளாக் செய்வது எப்படி?

போலீஸ் ஸ்டேஷன் போகாமலேயே தொலைந்த போனை கண்டுபிடிக்கலாம்! மத்திய அரசின் சூப்பர் வசதி!, Find Lost Mobile CEIR Portal Tamil: தொலைந்த போனை கண்டுபிடிப்பது எப்படி? | CEIR portal homepage and lost mobile tracking steps in Tamil

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால், விலை உயர்ந்த மொபைல் தொலைந்துபோனாலோ அல்லது திருடு போனாலோ நமக்கு ஏற்படும் பதற்றம் சொல்லி மாளாது.

போலீஸ் ஸ்டேஷன் அலைந்தாலும் போன் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், மத்திய அரசின் CEIR (Central Equipment Identity Register) போர்டல் மூலம், தொலைந்துபோன உங்கள் போனை முடக்கவும் (Block), அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்காணிக்கவும் (Track) முடியும். இதை எப்படி செய்வது? இதோ முழு விபரம்.

CEIR போர்டலில் புகார் அளிக்க என்னென்ன தேவை?

இந்த இணையதளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்வதற்கு முன், கீழ்க்கண்ட ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்:

Police Complaint (FIR/CSR): அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது ஆன்லைனில் புகார் அளித்ததற்கான ரசீது.

Bill / Invoice: போன் வாங்கியதற்கான பில்.

ID Proof: ஆதார் கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ்.

IMEI Number: உங்கள் போனின் IMEI எண் (பில்லில் அல்லது பாக்ஸில் இருக்கும்).

இதையும் படியுங்கள்!: 3 நாள் சார்ஜ் நிக்குமா? 8000mAh பேட்டரியுடன் மிரட்ட வரும் ரியல்மி நியோ 8!

Step-by-Step Guide: தொலைந்த போனை கண்டுபிடிப்பது எப்படி? 🔍

Find Lost Mobile CEIR Portal Tamil: தொலைந்த போனை கண்டுபிடிப்பது எப்படி? | CEIR portal homepage and lost mobile tracking steps in Tamil

ஸ்டெப் 1:
இணையதளத்திற்குச் செல்லவும் முதலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளரான www.ceir.gov.in-க்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: "Block Stolen/Lost Mobile" தேர்வு செய்யவும் முகப்புப் பக்கத்தில் சிவப்பு நிறத்தில் இருக்கும் "Block Stolen/Lost Mobile" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: விபரங்களைப் பதிவு செய்யவும் திறக்கும் படிவத்தில் கீழ்க்கண்ட விபரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்:

  • Device Information: மொபைல் எண், IMEI எண் மற்றும் போன் மாடல்.
  • Lost Information: தொலைந்த இடம், தேதி, மற்றும் காவல் நிலைய விபரம்.
  • Owner Details: உங்கள் பெயர், முகவரி மற்றும் அடையாள அட்டை (ID Proof).

ஸ்டெப் 4: OTP சரிபார்ப்பு கடைசியாக, உங்களிடம் உள்ள மாற்று மொபைல் எண்ணைக் கொடுத்து, வரும் OTP-ஐ பதிவிட்டு "Submit" கொடுக்கவும்.

ஸ்டெப் 5: Request ID இப்போது உங்களுக்கு ஒரு Request ID கொடுக்கப்படும். இதை வைத்து உங்கள் புகாரின் நிலையை (Status) தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்!:  ஒரே சார்ஜில் 120 மணிநேரம்! boAt-ன் இந்த இயர்பட்ஸ் விலை இவ்வளவு கம்மியா?

போன் கிடைத்த பிறகு என்ன செய்ய வேண்டும்? (Unblock Process) 

ஒருவேளை உங்கள் போன் கிடைத்துவிட்டது என்றால், மீண்டும் அதே CEIR இணையதளத்திற்குச் சென்று "Un-Block Found Mobile" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அங்கு உங்கள் Request ID-யை பதிவிட்டு, போனை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரலாம்.

ஏன் இது முக்கியம்? (Benefits)

  • பாதுகாப்பு: நீங்கள் போனை "Block" செய்த பிறகு, திருடிய நபரால் வேறு சிம் கார்டு போட்டு அந்த போனைப் பயன்படுத்தவே முடியாது.
  • கண்காணிப்பு: அந்த போனில் யாராவது புது சிம் கார்டு போட்டால், உடனே போலீசாருக்குத் தகவல் சென்றுவிடும் (Tracking Alert).

முக்கிய குறிப்பு (Note)

இந்த வசதி தற்போது இந்தியா முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. உங்கள் போன் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் அளிப்பது சிறந்தது.

நேரடியாகப் புகார் அளிக்க: CEIR Official Portal - Block Stolen/Lost Mobile

கருத்துரையிடுக