யாருக்கும் தெரியாம கால் ரெக்கார்ட் பண்ணனுமா? இந்த குட்டி ஆப் போதும்! அந்த 'சத்தம்' வராது!

This call is now being recorded சத்தத்தை நிறுத்துவது எப்படி? Oppo, Vivo, Realme போன்களில் யாருக்கும் தெரியாமல் கால் ரெக்கார்ட் செய்ய எளிய வழிகள் இதோ.
Sabari

Android phone dialer showing call recording option without announcement warning in Tamil, யாருக்கும் தெரியாம கால் ரெக்கார்ட் பண்ணனுமா? இந்த குட்டி ஆப் போதும்! அந்த 'சத்தம்' வராது!

நாம் யாருடனாவது முக்கியமான விஷயத்தைப் பேசிக்கொண்டிருப்போம்.. சரி, இதை ரெக்கார்ட் செய்து வைப்போம் என்று 'Record' பட்டனை அழுத்தினால்.. "This call is now being recorded" என்று அந்தப் பெண் குரல் கத்தி ஊருக்கே சொல்லிவிடும்.!

யாருக்கும் தெரியாம கால் ரெக்கார்ட் பண்ணனுமா? 

எதிர்முனையில் இருப்பவர் உடனே உஷாராகிவிடுவார். இந்தத் தொல்லை இல்லாமல், யாருக்கும் தெரியாமல் சைலண்டாக ரெக்கார்ட் செய்வது எப்படி? இதோ 2 எளிய வழிகள்.

கூகுள் டயலருக்கு ஒரு மாற்று வழி (TTSLexx Method)

பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் இப்போது Google Dialer தான் வருகிறது. இதில் இந்தச் சத்தத்தை நிறுத்த ஒரு சிறிய ஆப் போதும்.

  1. முதலில் Play Store சென்று "TTSLexx" என்ற சிறிய ஆப்பை இன்ஸ்டால் செய்யவும். (இது வெறும் ஒரு Text-to-speech என்ஜின் மட்டுமே).
  2. இப்போது உங்கள் போன் Settings > Text-to-speech output என்ற பகுதிக்குச் செல்லவும்.
  3. அங்கே Preferred engine என்பதை கிளிக் செய்து, TTSLexx என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. முக்கியமான ஸ்டெப்: இப்போது ஹோம் ஸ்கிரீன் வந்து, உங்கள் Phone App (Dialer) ஐ லாங் பிரஸ் (Long Press) செய்து App Info-க்குள் செல்லவும்.
  5. அதில் Storage பகுதிக்குச் சென்று Clear Data கொடுக்கவும். (பயப்பட வேண்டாம், உங்கள் காண்டாக்ட்ஸ் அழியாது. கால் ஹிஸ்டரி மட்டும் சில சமயம் அழியலாம்).
  6. இப்போது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் பண்ணுங்கள். இனி ரெக்கார்ட் செய்தால் சத்தம் வராது!
இதேபோல, ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருந்தால் கண்டுபிடிக்க முடியுமா? மொபைல் வைத்து கண்டுபிடிப்பது எப்படி?

Android phone dialer showing call recording option without announcement warning in Tamil

Oppo, Realme, OnePlus பயனர்களுக்கு (ODialer)

நீங்கள் ஒப்போ (Oppo), ரியல்மி (Realme) அல்லது ஒன்ப்ளஸ் (OnePlus) போன் வைத்திருந்தால், மேலே உள்ள முறை தேவையில்லை.

  • ODialer: பிளே ஸ்டோரில் "ODialer" என்று தேடினால், கலர் ஓஎஸ் (ColorOS) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டயலர் கிடைக்கும்.
  • இதை இன்ஸ்டால் செய்து Default Dialer ஆக செட் செய்துவிடுங்கள்.
  • இதில் கால் ரெக்கார்ட் செய்தால் எந்தச் சத்தமும் வராது. இது மிகவும் பாதுகாப்பானது.

Vivo & iQOO பயனர்களுக்கு (Secret Code)

விவோ மற்றும் ஐக்யூ போன் வைத்திருப்பவர்களுக்கு போனுக்குள்ளேயே ஒரு செட்டிங் உள்ளது.

  • ரகசிய கோட்: உங்கள் டயல் பேடில் *#*#556688#*#* என்று டைப் செய்யவும்.
  • Enable: உடனே ஒரு பக்கம் திறக்கும். அதில் "Enable Alternate Phone and Contacts" என்பதை ஆன் செய்யவும்.
  • இப்போது பழைய கூகுள் டயலர் மறைந்து, விவோவின் சொந்த டயலர் வந்துவிடும். இனி ஜாலியாக சத்தம் இல்லாமல் ரெக்கார்ட் செய்யலாம்.!

Samsung பயனர்களுக்கு

சாம்சங் போன்களில் ஏற்கனவே இந்த அறிவிப்புச் சத்தம் கிடையாது. அவர்களின் சொந்த டயலரிலேயே Settings > Record Calls > Auto Record Calls கொடுத்துவிட்டால் போதும். சத்தமில்லாமல் வேலை முடிந்துவிடும்.

Verdict: பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்!

கால் ரெக்கார்டிங் செய்வது சில நேரங்களில் உதவியாக இருக்கும். ஆனால், அதைத் தவறான வழியில் பயன்படுத்தாதீர்கள். சட்டத்திற்கு உட்பட்டு, உங்கள் பாதுகாப்பிற்காக மட்டுமே இதைப் பயன்படுத்துங்கள்.

கருத்துரையிடுக