வருடத்திற்கு கட்ட வேண்டாம்! மாதம் ₹79 போதும்! JioHotstar-ன் அதிரடி அறிவிப்பு!: இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளமாக உருவெடுத்துள்ள JioHotstar, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதுவரை வருடத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சந்தா (Subscription) செலுத்தும் முறை இருந்தது.
வருடத்திற்கு கட்ட வேண்டாம்! மாதம் ₹79 போதும்! JioHotstar-ன் அதிரடி அறிவிப்பு!
ஆனால், ஜனவரி 28, 2026 முதல், ரீசார்ஜ் செய்வது போலவே மாதம் மாதம் சந்தா செலுத்தும் "Monthly Plans" முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல், சூப்பர் மற்றும் பிரீமியம் என அனைத்துப் பிரிவுகளிலும் இந்த மாற்றம் வருகிறது. இதன் முழு விலை விபரங்கள் மற்றும் சலுகைகளை விரிவாகப் பார்க்கலாம்.
புதிய பிளான்கள்: யாருக்கு எவ்வளவு? (Detailed Price Breakdown)
ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் விலையை நிர்ணயித்துள்ளது.
Mobile Plan (மொபைல் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு)
நீங்கள் ஸ்மார்ட்போனில் மட்டும் படம், கிரிக்கெட் பார்ப்பவர் என்றால் இது உங்களுக்கானது.
- Monthly (மாதம்): ₹79
- Quarterly (3 மாதம்): ₹149
- Yearly (1 வருடம்): ₹499
- வசதிகள்: ஒரு நேரத்தில் ஒரு மொபைலில் மட்டுமே பார்க்க முடியும். விளம்பரங்கள் (Ads) வரும்.
- குறிப்பு: இதில் ஹாலிவுட் (Hollywood) படங்கள் மற்றும் ஆங்கில வெப் சீரிஸ் பார்க்க முடியாது. அதற்குத் தனியாக Add-on போட வேண்டும்.
Super Plan (டிவி மற்றும் மொபைல்)
வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவி மற்றும் மொபைல் என இரண்டிலும் பார்க்க விரும்புபவர்களுக்கு இது பெஸ்ட்.
- Monthly (மாதம்): ₹149
- Quarterly (3 மாதம்): ₹349
- Yearly (1 வருடம்): ₹1,099
- வசதிகள்: ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் (TV + Mobile or Laptop) பார்க்கலாம். இதிலும் விளம்பரங்கள் வரும். ஆனால், ஹாலிவுட் கன்டென்ட் (Hollywood Access) இதில் இலவசமாகக் கிடைக்கும்.
Premium Plan (விளம்பரமே வேண்டாம் என்பவர்களுக்கு)
சிறந்த 4K தரம் மற்றும் விளம்பரத் தொல்லை இல்லாத அனுபவம் வேண்டுமா?
- Monthly (மாதம்): ₹299
- Quarterly (3 மாதம்): ₹699
- Yearly (1 வருடம்): ₹2,199
- வசதிகள்: ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பார்க்கலாம். லைவ் ஸ்போர்ட்ஸ் (Live Sports) தவிர மற்றவற்றில் விளம்பரம் வராது. அனைத்து ஹாலிவுட் படங்களையும் 4K தரத்தில் பார்க்கலாம்.
ஹாலிவுட் பிரியர்களுக்கு ஒரு "ட்விஸ்ட்" (Hollywood Add-on) 🇺🇸
நீங்கள் Mobile Plan வைத்திருந்து, ஹாலிவுட் படங்கள் பார்க்க விரும்பினால், தனியாக பேக் போட வேண்டும்:
- மாதத்திற்கு: ₹49
- 3 மாதத்திற்கு: ₹129
- வருடத்திற்கு: ₹399 (குறிப்பு: Super மற்றும் Premium பிளான் வைத்திருப்பவர்களுக்கு இது தேவையில்லை, அதில் இது அடக்கம்).
பழைய சந்தாதாரர்களுக்கு விலை உயருமா? (Existing Users)
இதுதான் முக்கியமான கேள்வி. நீங்கள் ஏற்கனவே பழைய பிளானில் சந்தா செலுத்தி இருந்தால், உங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. உங்கள் பிளான் முடியும் வரை அல்லது Auto-renewal ஆன்-ல் இருக்கும் வரை, நீங்கள் பழைய விலையிலேயே தொடரலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்! சிரி அப்டேட்டில் ஆப்பிள் செய்த மெகா மாற்றம்!
JioHotstar-ன் அசுர வளர்ச்சி
கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 பில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களைக் கடந்துள்ள JioHotstar, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சென்று சேர்ந்துள்ளது. பயனர்களின் வசதிக்காகவே இந்த "மாதாந்திர பிளான்" (Monthly Plan) கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த பிளான் பெஸ்ட்?
- தனிநபர் (Students/Singles): ₹149 (3 மாதம்) மொபைல் பிளான் தான் பெஸ்ட் சாய்ஸ். மாதம் வெறும் ₹50 கணக்கில் வருகிறது.
- குடும்பம் (Family): வீட்டில் டிவி இருந்தால் ₹1099 (வருடம்) சூப்பர் பிளான் எடுப்பது லாபம்.
